Cinema

ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் ‛பெர்சி’

By  | 

‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’ படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். இப்போது விஷால் உடன் ‘சக்ரா’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் புதிதாக ‛பெர்சி’ என்ற பெயரில் கபே ஒன்றை சென்னையில் திறந்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது சமூகவலைதளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

நான் ஆரம்பித்துள்ள இந்த கபே, ரெஸ்டாரண்ட்களை விட சிறியது, மற்ற கபேக்களை விட கொஞ்சம் பெரியது. எளிமையான நிறைய நல்ல மற்றும் புதிய உணவுகள் இங்கு கிடைக்கும். உணவுடன் சிறந்த உறவை நோக்கிய எனது பயணத்தில், சுத்தமான, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒரு படி நெருக்கமாக இருக்கும். இது இதயத்திற்கு நெருக்கமாகவும் இருக்கும். சென்னையில் இவ்வாறானதொரு கபேயை அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

 

You must be logged in to post a comment Login