Antharangam

ஹோர்மோன் பிரச்சினை

By  | 

கேள்வி:

எனக்கு வயது 30. என் தாடையில், ஆண்களைப் போலவே தடிப்பான உரோமம் வளர்கிறது. Threading மூலம் அகற்றினாலும் மறுநாளே வளர்ந்துவிடுகிறது. அழகு சாதன நிலையங்களுக்குச் சென்று உரோமங்களை அகற்றுவதற்கான வசதி வாய்ப்புகள் எனக்கு இல்லை. எனவே, வீட்டிலிருந்தபடியே இதைத் தடுப்பதற்கு ஏதேனும் ஒரு வழி இருந்தால் சொல்வீர்களா? உடலின் வேறு இடங்களிலும்அதிகமான உரோமங்கள் காணப்படுகின்றன. இதனால், திருமணத்துக்குப் பிறகு ஏதும் பிரச்சினை உண்டாகுமா?

பதில்:

உங்களுக்கு உள்ளது நிச்சயமாக ஹோர்மோன் பிரச்சினைதான். ஒவ்வொரு மனித உடலிலும் ஆண் தன்மை கொண்ட ஹோர்மோன்களும், பெண் தன்மை கொண்ட ஹோர்மோன்களும் சுரக்கின்றன. அவை எந்த அளவில் சுரக்கின்றன என்பதைப் பொறுத்தே ஒருவரிடம் ஆணுக்கான பண்புகளோ அல்லது பெண்ணுக்கான பண்புகளோ மிகைத்துக் காணப்படும். உங்களுக்கு, ஆண் தன்மை கொண்ட ஹோர்மோன்கள் அதிகளவில் சுரப்பதனால்தான் முகத்தில் உரோமம் முளைக்கிறது.

அழகு சிகிச்சை நிலையத்துக்குப் போய் சிகிச்சை செய்துகொள்ள வசதியில்லாவிட்டாலும், தகுந்த சரும வைத்தியரிடம் காட்டி தேவையான மருந்துகளைப் பெற்று, அதன்மூலம் ஆண் தன்மை கொண்ட ஹோர்மோன்களின் சுரப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். எனவே, முதலில் சரும வைத்தியர் ஒருவரை அணுகுங்கள்.

அந்தரங்க உறுப்புப் பிரதேசத்தில் அதிகளவில் உரோமம் வளர்வதால், திருமணத்தின் பின் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் எதுவும் தோன்றாது எனினும், உங்களைச் சுத்தமாக வைத்திருப்பதற்குச் சற்று முயற்சி எடுக்க வேண்டும். அதாவது, எப்போதும் உங்கள் பிறப்புறுப்புப் பகுதியை, உரோமங்களைக் களைந்து சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

அடுத்து, உங்களுக்கு ஆண் ஹோர்மோன் அதிகம் சுரப்பதால், முடிந்தவரை விரைவில் திருமணம் முடித்து, குழந்தைப் பேற்றுக்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில், குழந்தைப் பேற்றில் ஏதேனும் பிரச்சினைகள் தோன்ற வாய்ப்பு இருக்கலாம்.

You must be logged in to post a comment Login