Fashion

1500 மணித்தியாலங்களில் தயாரான பிரியங்கா சோப்ராவின் ஆடை

By  | 

வருடந்தோறும், ஹொலிவூட் பிரபலங்கள் வித்தியாசமாக உடையணிந்து ஒப்பனை செய்து வரும் மெட்காலா (MetGala) என்னும் பேஷன் நிகழ்ச்சி நியூயார்க்கில் நடைபெறும்.

இந்த வருடமும் கடந்த திங்கட்கிழமை அன்று இந்த விழா நடைபெற்றது.

2017-ல் இருந்து வித்தியாசமான உடைகளை அணிந்துகொண்டு மெட்காலாவில் கலந்துகொள்ளும் நடிகை பிரியங்கா சோப்ரா இந்த வருடமும் வித்தியாசமான ஆடை மற்றும் மிக மிக வித்தியாசமான மேக்கப்புடன் கணவர் நிக் ஜோனாஸ் சகிதம் கலந்துகொண்டார்.

இந்த பேஷன் நிகழ்ச்சியின் தொனிப்பொருள் வித்தியாசமான உடைகள் மற்றும் மேக்கப்தான் என்றாலும், கடந்த இரண்டு வருடங்களைப் போலவே இந்த வருடமும் பிரியங்காவின் ஆடை அணிந்து அனைவரின் பார்வைவையும் அவர் மீது திருப்பி விட்டார்.

இந்த நிலையில், மெட் காலாவுக்காக பிரியங்கா சோப்ராவுக்கு ஆடையை வஎவமைத்து கொடுத்த பிரபல ஆடை வடிவமைப்பகளர் பிராண்டான `டியோர்’ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பிரியங்கா சோப்ராவுக்கு தைத்த உடையைப் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், `இந்த உடையை பிரியங்கா மெட் காலாவில் கலந்துகொள்வதற்கென்றே விசேஷமாகத் தயாரித்தோம். வையிட், பிங்க், லெமன் யெல்லோ போன்ற மென்மையான நிறங்களில், பறவைகளின் இறகுகளை ஒத்த ஒவ்வொரு வடிவங்களையும் வெள்ளி நூலால் கைகளாலேயே தைத்துள்ளார்கள். இந்த உடையைத் தயாரிப்பதற்கு எங்களுக்கு 1500 மணி நேரங்கள், அதாவது 62 நாள்கள் தேவைப்பட்டது என்றும், உடையைத் தயாரித்தவர்கள் அந்த வீடியோவில் சொல்கிறார்கள்.

அழகு ஆடைதான். ஆனால், பிரியங்காவின் மேக்கப்தான் சரியில்லை என்று இந்த வீடியோவுக்கும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் .

You must be logged in to post a comment Login