Health

நீண்ட நேரம் தாம்பத்தியத்திற்காக வயக்ரா சாப்பிடுவது சரியா?

By  | 

நவீன மருத்தவத்துடன் பயணிக்கும் நாம் எல்லாவிதமான இன்பங்களையும் பணத்தினால் பெற்றுகொள்ளவே முனைகின்றோம். அவற்றுள் ஒன்று தான் வயக்ரா மாத்திரைகள். வயக்ரா மாத்திரைகளை நாம் உட்கொள்வதால் ஆரம்பத்தில் இனிமையை தந்து போக போக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
இவ் மாத்திரைகளில் உள்ள சில்டெனாஃபில் (sildenafil) என்கிற மூல பொருள் உடலில் வேதி வினைகளை ஏற்படுத்தி, பிறப்புறுப்பில் ஏற்படுகின்ற அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் ரத்த அழுத்த குறைவு ஏற்படுகின்றது.

மாய உணர்வைத் தூண்டும்.
மாத்திரைகளை நாம் உட்கொள்வதால் இது உணர்வை நேரடியாக தூண்டாமல் மனதில் மாய உணர்வை ஏற்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட செய்யும்.

நரம்பு மண்டலத்தை சிதைக்கும் .
இவ் வகை மாத்திரைகள் நேரடியாக நரம்பு மண்டலத்தில் தாம்பத்திய உணர்வை அதிகம் தூண்டச் செய்யும். இதனால், ஆண்களுக்கு அடிக்கடி இந்த மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, தொடர்ந்து எடுத்து கொள்ளும் போது இது நரம்பு மண்டலத்தையே முற்றலிலுமாக சிதைத்து விடும். இதானால் வயதாகும் போது பல நோய்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்

தாம்பத்தியம் என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த செயற்பாடு உங்கள் துணையுடன் அன்பை பகிர்ந்து கொள்வதால் நீங்கள் விரும்புவது போன்று தாம்பத்தியமும் நீடிக்கும். அதனையும் தாண்டி முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உணவு மற்றும் இயற்கையான வழிகளை பின்பற்றினால் ஆரோக்கியமான தாம்பத்தியம் சாத்தியமே

You must be logged in to post a comment Login