Q&A

By  | 

கேள்வி: பேயாகும் மனைவிக்கும் பேயோட்டும் கணவனுக்கும் குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும்?

-இளம்பிறையோகன்,
புத்தளம்.


பதில்: நோயோடும் நொடியோடும் இருக்கும்.

***

கேள்வி: அன்பு ஆரவள்ளியே, ஒரு கன்னிப்பெண் எப்படியான வாளிபனை விரும்புகிறாள்?

-ஏ.அமானுல்லாஹ்,
புத்தளம்.


பதில்: நீங்கள் கேட்கும் வாளிபன் யார் என்று எனக்குத் தெரியவில்லையே!

***

கேள்வி: ஆரவள்ளியே, உங்களுக்கு புளி மாங்காய் சாப்பிட மிகவும் விருப்பம் என்பது உண்மையா?

-சி. பேரின்பஜோதி,
திருகோணமலை.


பதில்: ஐயையோ! அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது!

***

கேள்வி: ஆரவள்ளி, சனநெரிசலில் காதலியின் காலென்று நினைத்து அருகில் நின்ற அவளின் அம்மாவின் காலைச் சுரண்டிட்டன். இதனால் பெரிய ஜில்மாலா போய்விட்டது. என்ன செய்வது?

-எஸ்.பி.பி.கணேஷ்,
தாண்டியடி.


பதில்: நல்லவேளை தூங்கும் நேரத்தில் இப்படிச் செய்யாமல் விட்டோமே என்று சந்தோஷப்படுங்கள்!

 

***

கேள்வி: அணில் கடித்த மாம்பழம் ருசிக்குமா?

 -துணவியுர் நடா.


பதில்: ருசியான பழங்களை பார்த்துத்தானே அணில் கடிக்கும்.

***

கேள்வி: ஆரவள்ளியே, பெண்களை பூவுக்கு ஒப்பிடுகிறார்களே அது ஏன்?

 -C.நூர்ஜஹான்,
களுத்துறை.


பதில்: திருமணத்திற்கு பிறகு வாடி விடுவதால்!

***

கேள்வி: என் அன்பிற்கினிய ஆரவள்ளியே இந்த உலகில் எத்தனை மதங்கள் உண்டு என்று சொல்ல முடியுமா?

-சு.ஜோன் இராமன்,
நோர்வுட்.


பதில்: மதம் பிடித்தவர்களிடம் தான் கேட்கவேண்டும்.

***

கேள்வி: உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடைபிடிக்கும் மந்திரம் ஒன்றைக் கூற முடியுமா?

-சி.பேரின்பராசா,
கந்தளாய் – 02.


பதில்: பிகரோடு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம் சுகரோடு சாவார்!

 

 

 

 

 

You must be logged in to post a comment Login