Astrology

By  | 

பெற்றோர் மீது அன்பும் அக்கறையும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
சார்வரி புத்தாண்டு தனுசு ராசியில் துலாம் லக்னத்தில் பிறக்கிறது. உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ஆண்டு பிறப்பதால் நீங்கள் எதிர்பாராத பணவரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கக்கூடிய உறவு மிக இனிமையான தாகவே இருக்கும், பொன், பொருள், ஆபரண சேர்க்கைகளும் உண்டாகும். குடும்பத்தில் பொருட்சேர்க்கையும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றமான சூழல் உண்டாகும். அழகுப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் உண்டாகும். மனதில் எண்ணிய காரியங்கள் சிறிது அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் தேவை. வீடு மனை நிலம் போன்றவற்றை வாங்குவீர்கள் உற்றார் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், தெய்வ அருள் பரிபூரணமாக இந்த ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

பெண்கள்:
பெண்கள் நல்ல வளத்தோடு மன நிம்மதியும் காண்பர். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். ஓக.31க்கு பிறகு சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வெளியே பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உடல்நிலை அவ்வப்போது அதிருப்தியளிக்கும். ஆக.31க்கு பிறகு பூரண குணமடைவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

 

திட்டமிட்டு பணியாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!
இந்த சார்வரி தமிழ்புத்தாண்டு உங்களுக்கு அதிக சந்தோஷங்களை தரப்போகிறது. நீங்க எதற்கும் கவலைப்படாதீங்க. பதவிகள் பட்டங்கள் தேடி வரும். கணவன் மனைவி உறவுகளையும் கவனம் தேவை சின்ன சின்ன விஷயங்களுக்காக மற்றவர்களுடைய பிரச்சினைகளை பேசி உங்களுடைய கணவன் மனைவி உறவினை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மனைகள் மற்றும் புதிய வீடு வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த துறைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நினைவாற்றலில் மந்தத்தன்மை அதிகரிக்கும். புத்திரர்கள் வழியில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனுசரித்துச் செல்லவும். அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகள் மேம்படும். உடன் இருப்பவர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.

பெண்கள்:
பெண்கள் மகிழ்ச்சியுடன் குடும்ப வாழ்வில் ஈடுபடுவர். கணவரின் அன்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவுடன் இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜூலை7க்கு பிறகு குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அண்டை வீட்டாரிடம் வீண் பேச்சு வேண்டாம். நவ.11க்கு பிறகு தடைப்பட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.
வணங்க வேண்டிய தெய்வம் : பெருமாள்
அதிர்ஷ்ட நாள் : வெள்ளி

 

மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்கும் மிதுன ராசி அன்பர்களே!
சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் உங்களுக்கு அற்புதங்களை ஏற்படுத்தப்போகிறது. அஷ்டம சனி ஆட்டி வைக்கும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்தலாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடக்கவும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற்று அதன் மூலம் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். உங்களுக்கு தெய்வத்தினுடைய பரிபூரண அனுக்கிரகமும் உடல் நலமும் மிகச்சிறப்பாக இருக்கும். இது வரைக்கும் உங்க உடம்புல சின்ன சின்ன தொந்தரவுகள் இருந்து வந்திருக்கலாம் அதற்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

பெண்கள்:
பெண்கள் பொறுமையுடன் விட்டுகொடுப்பது நல்லது. சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்புண்டு. ஜூலை 7க்கு பிறகு தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அயல் வீட்டார் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர். ஓக.31க்கு பிறகு ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். புதிய பதவியும் தேடி வரும். உடல்நிலை சீராக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.
வணங்க வேண்டிய தெய்வம் : துர்க்கை
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்

 

கடமையை கண்ணாக மதிக்கும் கடகம் ராசி அன்பர்களே!
சார்வரி தமிழ் புத்தாண்டு முன்னேற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. அதிகார பதவிகள் தேடி வரும். உங்களுக்கு நல்ல மதிப்பு மரியாதை தேடி வரும். குரு பார்வையால் இந்த ஆண்டு குதூகலமாக இருப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளினால் வீடு களைகட்டும். திருமண தடை நீங்கும் விரும்பிய வாழ்க்கை தேடி வரும். ஆண்டு தொடக்கத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இதுவரைக்கும் குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து உங்களுடைய உறவிலே சுமூகமான இனிமையான சூழ்நிலை நிலவும், குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாகும். தனவரவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். மனதிற்கு பிடித்த பொன், நகைகள் யாவற்றையும் வாங்கி மகிழ்வீர்கள். புதிய வாகனம் மற்றும் மனை வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமும், அனுகூலமான பலன்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்கள்:
பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பர். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். இருப்பினும் குருவின் 9 ஆம் பார்வையால் துணிச்சல் பிறக்கும். பண வரவு இருக்கும். அண்டை வீட்டாரின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். பெண்கள் வாழ்வில் சிறப்படைவர். குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். உடல்நலம் சிறப்படையும்.
வணங்க வேண்டிய தெய்வம் : சிவன்
அதிர்ஷ்ட நாள் : திங்கள்

 

பொன்மனம் படைத்த சிம்ம ராசி அன்பர்களே!
சார்வரி வருடம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பிறக்கிறது. உங்களுக்கு சங்கடங்களை விட சந்தோஷங்கள் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீங்க. கணவன் மனைவி உறவு மிக இனிமையானதாக இருக்கும். சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போக கூடிய மன பக்குவம் உங்களிடத்தில் இருக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய செயல்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்பாடும். குடும்ப நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் ஏற்படும் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் தெளிவு பிறக்கும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரமும், பாராட்டும் காலதாமதமாக கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும்.

பெண்கள்:
பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும். ஜூலை 7க்கு பிறகு தடைப்பட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பிரிந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். நவ.13க்கு பிறகு குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும். அக்கம் பக்கத்தினர் வகையில் தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். ஓக.31க்கு பிறகு கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம்.
வணங்க வேண்டிய தெய்வம் : சூரியன்
அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு

 

கருணை மனம் படைத்த கன்னி ராசி அன்பர்களே!
இந்த சார்வரி தமிழ் புத்தாண்டு சுகமான ஆண்டாக பிறக்கிறது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். உங்க வீட்டில் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். உங்களுக்கு பணப்பற்றாக்குறை நீங்கும். குரு பகவான் அதிசாரமாக ஐந்தாம் வீட்டில் இருக்கிறார் மன இறுக்கம் குறையும். குடும்பத்தில் அமைதி நிலை இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்களும், சுபீட்சமும் ஏற்படும். புதுவிதமான முயற்சிகளும் அதை சார்ந்த செயல்பாடுகளும் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமான பலனை ஏற்படுத்தும். எதிர்பார்த்த சில செயல்கள் நிறைவடைய காலதாமதமும், அலைச்சலும் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் அனுசரித்து செல்லவும். மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தகுந்த காலக்கட்டங்கள் அமையும்.

பெண்கள்:
குதூகலமான பலனை காண்பர். கணவரின் அன்பும் கிடைக்கும், உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சியை காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு ஜூலை 7ஆம் திகதிக்கு பிறகு வீண் செலவு ஏற்படலாம். கவனமாக இருப்பது புத்திசாலித்தனம். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்குசென்று வருவீர்கள்.பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். உடல்நலம் வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்
அதிர்ஷ்ட நாள்: புதன்

 

நல்லோர் நட்பை விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!
சார்வரி தமிழ் புத்தாண்டில் நிறைய சவால்களை சந்திப்பீர்கள். துணிச்சலாக நீங்க எடுக்கப்போகிற முடிவுகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். இந்த ஆண்டு சொத்துக்களை வாங்குவீர்கள் வீடு வாங்கும் யோகமும் தேடி வரப்போகிறது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் நீங்கி மிக இனிமையான ஒரு சூழ்நிலை உருவாகும். இந்த ஆண்டு முழுவதுமே உங்களுக்கு தெய்வ கடாட்சம் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளின் மூலம் எண்ணிய பலன்கள் கிடைக்காவிட்டாலும் செல்வாக்கு மேம்படும். தொழில் சார்ந்த பயணங்களின் மூலம் சுபீட்சம் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும்.

பெண்கள்:
குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களால் குடும்ப வாழ்வு சிறக்கும். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வந்து சேரும். சிலருக்கு தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. வருட இறுதியில் குடும்பத்தில் பிரச்சினை வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம் கவனம். அண்டை வீட்டார் வகையில் கருத்து வேறுபாடும் ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு  உபாதைகள் வரலாம்.
வணங்க வேண்டிய தெய்வம் : லட்சுமி நரசிம்மர்
அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை

 

நேர்மை குணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
உங்களுக்கு இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். வங்கி சேமிப்பும் உயரும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். சனி வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலத்தில் பேச்சில் கவனமாக இருங்கள். அடிப்படை வசதிகள் பெருகும். திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். தொட்டதெல்லாம் பொன்னாகும் நினைத்த காரியம் நடக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். புதிய வீடு,மனை, வாகனம் வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபோகும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும், கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சில சில மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் கூட அதிலிருந்து உடனே வெளியே வந்து விடுவீர்கள். உங்கள் நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு பல வகையில் உதவி செய்வார்கள்.

பெண்கள்:
பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பீர்கள். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து போவது நல்லது. உடல்நிலை சிறப்பாக இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. குலதெய்வ வழிபாடு உங்களுக்கு மேலும் கூடுதல் பலத்தை கொடுக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் : கால பைரவர்
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்கிழமை

 

தன்னலம் இல்லாத தனுசு ராசி அன்பர்களே!
இந்த சார்வரி புது வருடம் உங்க ராசியிலேயே பிறக்கிறது. உங்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். எந்த பொறுப்பையும் யாரை நம்பியும் ஒப்படைக்காதீங்க. ஏழரை சனி காலம் என்பதால் ஒருவித பதற்றத்துடனேயே இருப்பீங்க. வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். அடிக்கடி கோபப்பட்டு அவதிப்பட்டீங்க. இனி உங்க கோபம் படிப்படியாக குறையும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஆதரவான சூழல் உண்டாகும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். வீடு மாற்றம் மற்றும் மனையில் புதிய வீடுகள் கட்டுவதற்கான எண்ணங்களும், முயற்சிகளும் மனதில் தோன்றும். புத்திரர்கள் மூலம் பொருள் லாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். தம்பதியினர் இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற விவாதங்களையும், பிரச்சனையும் தவிர்க்கலாம்.

பெண்கள்:
சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். கணவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். உடல்நலம் பாதிக்கப்படலாம்.
வணங்க வேண்டிய தெய்வம் : குரு பகவான், ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட நாள் : வியாழக்கிழமை

 

மற்றவர்களுக்கு உதவும் மனம் படைத்த மகர ராசி அன்பர்களே!
இந்த சார்வரி தமிழ் புது வருடம் குடும்பத்தில் அதிக குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறது. நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும். உங்களின் திறமை அதிகரிக்கும். செலவுகள் கூடும். வரவை விட திடீர் செலவுகள் ஏற்படும். உங்க குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். திருமணம் கைகூடி வரும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர்கல்வி யோகம் கை கூடி வரப்போகிறது. ஏழரை சனி காலம் என்பதால் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்,  நிதானமாக இருங்கள். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் கை கூடி வரப்போகிறது. மறைமுக எதிர்ப்புகள் குறையும். உங்க பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தைகளுக்கு கல்வி செலவுகள் தேடி வரும். திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.

பெண்கள்:
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அவர்களால் குடும்பம் சிறப்பு அடையும். பொன், பொருள் சேரும். சகோதரர் உறுதுணையாக  இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எப்பொதும் பொறுமையாகவும், விட்டுக் கொடுத்து போகவும்.  பிறந்த வீட்டு சொத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு. புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  உடல்நலம் திருப்தியளிக்கும். நோயால் அவதிப்பட்டவர்கள் பூரண குணம் பெறுவர். நீண்ட காலமாக  சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவர்.
வணங்க வேண்டிய தெய்வம் : விநாயகர்
அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

 

நல்லவர் நட்பை நாடும் கும்ப ராசி அன்பர்களே!
சார்வரி தமிழ் புதுவருடம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. என்னதான் ஏழரை சனியில் விரைய சனி, விரைய குரு என்றாலும் உங்களுக்கு லாபங்களை அள்ளித்தரப்போகிறது. ராஜயோகத்தை தரப்போகிற ஆண்டாக அமைந்துள்ளது. முன்னேற்றங்கள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். சேமிப்பு அதிகமாகும். சுப செலவுகள் ஏற்படும். உங்களுடைய கடன்களை திரும்ப செலுத்துவீர்கள். கடந்த காலங்களில் உங்களை வாட்டி வதைத்த பிச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு மிக மிகச் சிறப்பாக இருக்கும், உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் புதிய வீடு கட்டும் யோகமும் உண்டாகும்.

பெண்கள்:
குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஜூலை7க்கு பிறகு மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். குடும்பத்தில் இருந்த பின்னடைவுகள் மறையும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.
வணங்க வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

 

எப்போதும் உற்சாகமாய் உலாவரும் மீன ராசி அன்பர்களே!
உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. திடீர் திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. நல்ல வேலை கிடைக்கும். சுப காரியங்கள் கைகூடி வரும். வேளையில் இருந்த பிரச்சினைகள் தீரும். கௌரவ பதவிகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிரிந்திருந்த உறவினர்கள் ஒன்று சேருவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். திருமணம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகளுக்காக சுப செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் உடைய வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உடல் ஆரோக்கியம் மிகச்சிறப்பாக இருக்கும்.

பெண்கள்:
பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சகோதரர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவர். உறவுகளிம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் உயர்வு பெறுவர். புதிய பதவி தேடி வரும். சுயதொழில் புரியும்  பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.  ஆடை, ஆபரணம் சேரும். பிறந்த வீட்டில் இருந்து பொருள் வந்து சேரும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். ஆரோக்கியம் மேம்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் : மதுரை மீனாட்சி
அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை

 

 

You must be logged in to post a comment Login