Mother

By  | 

அம்மா

முந்நூறு நாட்க்கள்

முழுகாமல் பெற்றெடுத்த

முத்து நானென

என்னை அழுகாமல்

பாதுகாத்த தெய்வமம்மா நீ..

 

இருண்ட அறைக்குள்ளும் எனக்கு

மட்டும் ஒளி கொடுத்த தீபமம்மா நீ..

 

புரண்டு படுத்தால் அரண்டு விடுவேனென

புறமாய் படுத்துறங்கியவளம்மா நீ..

 

எனக்கு பசிக்கின்ற நேரத்தில்

பால்சுரக்கும்

உன் மார்பகங்கள்

அந்த அட்சய பாத்திரத்திற்கும்

அடிமைதானேயம்மா..

 

வார்த்தைகளுக்குள் ஒரு

வடிவத்தை தேடினேன்

வடிவாய் வந்தது

அமாமா எனும் சொல்

கோயிலுக்குள் ஒரு

தெய்வத்தை தேடினேன்

நேரிலேயே காட்சி கொடுத்தது

அம்மா எனும் தெய்வம்

 

அளவிடமுடியாத அன்பின்

எல்லையம்மா நீ

ஆசையோடு உன்னை

ஆராதிக்கும் பிள்ளையம்மா நான்

 

என் முதல் உறவும்

மொத்த உறவும் நீதானேயம்மா…

 

நெஞ்சுடைந்த வேளையிலும்

தஞ்சமடைந்திட

நாடுது மனது

தாயே உந்தன்

மடிமீது…

– பெரியசாமி நிர்மலா,

மாத்தளை.

 

உலகின் உயிரோவியம் அம்மா

இருபத்தொராம் நூற்றாண்டு

இயந்திர உலகம் இயங்கிக்கொண்டு

இருக்கின்ற வேளை இது

 

இன்றைய தொழிலாளிகள் பலர்  மத்தியிலே

பல பல கனவுகள் கரைந்து போய்

கனக்கிறது

 

அன்றாட உணவுக்காய்

அழகாய் நெல் விதைக்கிறான்

அன்பான விவசாயி

 

அன்பின் சொந்தமாய்

அனைவருக்கும் கற்றுக்கொடுக்கிறான்

ஆசான் வேடத்தில்

 

இயன்றவரை இன்னல்களை

போக்க இயல்பாக – இன்று

இலத்திரனியலாளர்கள் பலர்

 

இன்றும் இயற்கையின் அழகியலில்

அக்கறை கொள்ளும் இனிய

துப்புரவு தொழிலாளர்கள் சிலர்

 

ஈகை குணம் கடந்து

சேவை புரிந்திடும்

உலக வைத்தியர்கள் பல பல

 

பிடித்தோ பிடிக்காமலோ

சலித்தோ சலிக்காமலோ

இப்படி பல தொழில் புரியும்

எண்ணற்ற ஏராள

மனித உள்ளங்கள் மத்தியில்

 

அன்றைய பொழுதிலும்

இன்றைய பொழுதிலும்

அன்பாய் வாழ்க்கையை கடத்தி

ஆறுதலான சொற்களுடன்

இனிய இம்சைகளாய்

உலக மனப்பாங்காய்

ஊக்குவிக்கும் நம் நட்பாய் – எம்மை

எழுத்துவிக்கும் எழுத்தாணியாய்

ஏராளமான அன்பாய்

ஐயமின்றி நான் சொல்லும்

சம்பளமில்லா அழகிய

தொழிலாளி என்றால்

கர்வமாய்ச் சொல்வேன்

அது என் அம்மா என்று

 

தினங்களை கொண்டாடாமல்

தினம் தினம் அவர்களைக்

கொண்டாட முயற்சி செய்யுங்கள்..

உலகின் சூஉயிரோவியமாய்

தாய்மை சுமந்த அம்மா

மிக அழகு…

-ப்ரியா காசிநாதன்,

யாழ்ப்பாணம்

 

You must be logged in to post a comment Login