Home Garden

வீட்டில் வல்லாரை கீரையை வளர்ப்பது எப்படி?

By  | 

வகைகள்

சமவெளி வல்லாரை – வெளிர்ப் பச்சை நிற இலைகளுடையது. மலைப்பகுதி வல்லாரை கரும்பச்சை இலைகளுடையது.

பருவம்

வல்லாரைக் கீரையை அக்டோபர் மாதம்  சிறந்த பருவம் ஆகும். வல்லாரையானது மிதமான காலநிலை மற்றும் நிழலான பகுதிகளில் நன்கு வளரும். 50 சதவிகிதம் நிழலில் அதிகமாக வளரும் மற்றும் மகசூல் அதிகமாக கிடைக்கும்.

மண்

ஈரப்பதமான சதுப்பு நிலம் மற்றும் நீர் நிலைகளைச் சுற்றி நன்கு வளரும். அமில மண் மற்றும் உவர் மண்ணில் வளரும் தன்மை கொண்டது. ஈரத் தன்மையுள்ள, அங்க தன்மை கொண்ட களிமண்ணில் நன்கு வளரும்.

நிலம் தயாரித்தல்

தேங்காய்  நார் மற்றும்  ஈரத் தன்மையுள்ள களிமண் சேர்த்து மண் கலவை செய்து கொள்ளவும்.

பயிரிடுதல்

மண் கலவையில்  வல்லாரை  செடியை அல்லது விதைகளை பயிரட வேண்டும்.

நீர் 

நடவு செய்த உடன் நீர் பாய்ச்ச வேண்டும். பயிர் நன்கு வளரும் வரை நான்கு அல்லது ஆறு நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு பயிரின் தேவைக்கு ஏற்ப பாசனம் செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

இது இயற்கையாகவே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதால் பொதுவாக எந்த நோய்களும் தாக்குவது இல்லை. நீர் பாய்ச்சும் போது அமிர்தகரைசல், பஞ்சகாவ்யா ஆகியவற்றை கலந்து நீர் பாய்ச்சினால் கீரை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.மஞ்சள் கலந்த நீரை தெளிக்கவும்.

அறுவடை

15 நாட்கள் இடைவெளியில் வளரும் கிளைகளிலிருந்து வெளிப்புற இலைகளை அறுவடை செய்ய வேண்டும்.

அறுவடை செய்யும் பொழுது முழுவதுமாக அறுவடை செய்யாமல் சிறிது பயிரை நிலத்தில் விட்டு அறுவடை செய்ய வேண்டும். அப்போதுதான் அது மறுபடியும் வளரும்.

பயன்கள்
இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து A, C மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.

வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மூளை நரம்புகள் வலுப்பெறும்.

வீக்கம், கட்டிகள் மறைய வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.

இக்கீரையானது தொண்டைக்கட்டுதல், காய்ச்சல் மற்றும் சளி ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.

உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது இந்த வல்லாரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *