Cinema

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

By  | 

தென் இந்திய சினிமாவில் மிகப் பெரிய பிரபலத்தை அடைந்து, அதுவும் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்று வெற்றிப் பாதையில் பயணிக்கும் நயன்தாரா நேற்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு லட்சக் கணக்கான ரசிகர்கள் முகநூல்,டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைத்தளங்கள் ஸ்தம்பிக்கும் அளவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட ரசிகர்களின் கண்கள் இன்று நயன்தாராவை மட்டும் தேடவில்லை. விக்னேஷ் சிவன் மீது சிலரில் தேடல்கள் இருந்தது.

நயன் பிறந்தநாளை விக்கி எப்படி கொண்டாடினார் என்பதை தான் அதிக அளவிலான ரசிகர்கள் ஆர்வமாக தேடி வருகின்றனர். இந்த ஆர்வத்தை தீர்க்கும் அளவிற்கு விக்கி தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டேடஸ் பகிர்ந்தார்.

அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஒரு நிமிடம் வாயை பிளந்து நின்றனர். அப்படிபட்ட சிறப்பான கொண்டாட்டம் அது.

தமிழ் சினிமாவில் இருவரும் ஒன்றாக இணைந்து கடந்து வந்த பாதையை விவரிக்கும் விஷயங்களை கொண்டு எண் 9 என்ற வடிவத்தில் கேக் தயார் செய்யப்பட்டிருந்தது. பின்பு சிவப்பு நிறம் ஆர்கிட் மலர்கள், கண்களை கவரும் வகையில் மின்மினுக்கும் லைட் செட்டிங் என ஒரே பிராகசமான கொண்டாட்டம் நடந்துள்ளது என்று அந்த ஃபோட்டோவை பார்த்தாலே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *