Cookery

சோயா மீட் குருமா செய்முறை !

By  | 

தேவையான பொருட்கள்

  • சோயா மீட் – 1 கப்
  • பட்டாணி – அரை கப்
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 3/4 ஸ்பூன்
  • தனியா தூள் – 1/2 ஸ்பூன்
  • சீரக தூள் – 1/2 ஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
  • தேங்காய் பால் – 1/2 கப்
  • உப்பு – 3/4 ஸ்பூன்
  • எண்ணெய் – 4 ஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிது

செய்முறை 

* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

* சோயா மீட்டை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, சோயா மீட்டை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும்.

* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

* அடுத்து அதில் மீல் மேக்கர், தேங்காய் பால், வேக வைத்த பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சுவை மிகுந்த சோயா மீட் குருமா தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *