Cookery

ப்ரை மெக்கரோனி சீஸ் ஸ்டிக்ஸ் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • மெக்கரோனி- 225 g
  • பட்டர் – 4 மேசைக்கரண்டி
  • கோதுமை மா – 2 1/4 கப்(இரண்டு பங்காக பிரிக்கவும்)
  • பால் – 4 கப்
  • உப்பு –  1 தேக்கரண்டி
  • மிளகு – 1/2
  • சீஸ் – 200 g
  • முட்டை  – 4
  • ப்ரட் க்ரம்ஸ் – 2 கப்
  • மரக்கறி எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

*கொதிக்கும் நீரில் மெக்கரோனியை போட்டு 7 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

*பாத்திரம் ஒன்றை அடுப்பில் குறைந்த வெப்பத்தில் வைத்து பட்டர்,மா,பால்,உப்பு, மிளகு ,சீஸ் சேர்த்து கரண்டியால் கிளற வேண்டும். பின்பு வேக வைத்து இருக்கும் மெக்கரோனியை சேர்த்து கிளறி அடுப்பை அனைக்க வேண்டும்.

*தட்டில் ஒயில் பேப்பர் போட்டு அதில் அடுப்பில் வைத்த மெக்கரோனியை போட்டு குளிரூட்டியில் 2 மணித்தியாலங்கள் வைக்க வேண்டும்.

*குளிரூட்டியில் வைத்த மெக்கரோனிளை எடுத்து செவ்வக வடிவில் 3 இன்ச் வைத்து துண்டுகளாக வெட்ட வேண்டும்.

*வெட்டிய துண்டுகளை மாவில் தோய்த்து பின்பு முட்டையில் தோய்த்து ப்ரட் கிரம்ஸில் தோய்த்து எடுக்க வேண்டும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி 325°F வெப்பத்தில் நன்கு சூடாக்க வேண்டும்.எண்ணெய் சூடாகியதும்
துண்டுகளாக்கிய மெக்கரோனியை 2-3 நிமிடங்கள் எண்ணெயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

*ப்ரை மெக்கரோனி சீஸ் ஸ்டிக்ஸ் தயார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *