Beauty

அனைத்து முடி பிரச்சினைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்…!

By  | 

தேவையான பொருட்கள்:

செம்பருத்தி பூ – 10

தேங்காய் எண்ணெய் – 250 கிராம்

வெந்தயம் – 1 ஸ்பூன்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில்  வெந்தயம்  சேர்த்து  கொதிக்க வைத்து  அதில் செம்பருத்தி பூ போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்  ஆற வைத்து  வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை  தலைக்கு  தினமும்  பயன்படுத்தினால்  முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

பயன்கள்
1.செம்பருத்தி முடி வளர்ச்சியை தூண்டும்.
2. முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.
3. முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.
4. பொடுகை போக்க மிகவும் சிறந்தது.
5. நரைமுடியை போக்கும்
6.  தலை அரிப்பை தடுக்கும்.

குளிக்க செல்லும் முன், சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முரை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *