Beauty

பிரகாசமான சருமத்தை பெற மில்க் பௌடர் ஃபேஸ் மாஸ்க்

By  | 

மில்க் பௌடரும் எலுமிச்சை சாறும்

எண்ணெய்ப் பசையான சருமம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் ஏற்ற முறை இதுதான். சருமத்தில் உள்ள எண்ணெய் பசை அதனால் உருவாகும் பருக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.

தேவையான பொருள்கள்

  • மில்க் பௌடர் – ஒரு மேசைக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி

பயன்படுத்தும் முறை

மில்க் பௌடர் எலுமிச்சை சாறு இரண்டையும்  சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை முகத்தை நன்கு கழுவி விட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் நன்கு பூசி உலர விடுங்கள். நன்கு உலர்ந்தபின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இந்த முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். சிறந்த பயன் பெற்றிருப்பதை உணர்வீர்கள்.

மில்க் பௌடர், பப்பாளி, ரோஸ்வோட்டர்

தேவையான பொருட்கள்

  • மில்க் பௌடர் – 1 மேசைக்கரண்டி
  • கனிந்த பப்பாளி – 1 மேசைக்கரண்டி
  • ரோஸ்வோட்டர் – சில துளிகள்

பயன்படுத்தும் முறை

மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு மசித்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். சில நிமிடங்கள் ஆனதும் அது மீண்டும் திக்கானது போல ஆகிவிடும். மீண்டும் சில துளிகள் ரோஸ்வோட்டர் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்னர் 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவவும். வாரம் இரண்டு முறை இதுபோல் செய்யலாம். ஓரிரு முறையிலேயே கவனிக்கத்தக்க மாற்றத்தை அடைவீர்கள்.

மில்க் பௌடர், குங்குமப்பூ

தேவையான பொருட்கள்

  • மில்க் பௌடர் – 1 மேசைக்கரண்டி
  • குங்குமப்பூ – சிறிது
  • எலுமிச்சை சாறு – சில துளிகள்

பயன்படுத்தும் முறை

ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் சில துளிகள் குங்குமப்பூவைச் சேர்த்து அதனுடன் பேஸ்ட் செய்வதற்கான சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அதை அப்படியே அரை மணி நேரம் உலர விடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடுங்கள்.

மில்க் பௌடரும் முல்தானி மட்டியும்

உங்களுக்கு சருமம் பளபளப்பாக மட்டுமின்றி நல்ல நிறமும் மிக வேகமாகக் கூட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், உங்களுக்கான சிறந்த தேர்வாக இந்த கலவை இருக்கும். பொதுவாக எல்லோருடைய வீடுகளிலும் முல்தானி மட்டி இருக்கும். இல்லையென்றாலும் எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடிய ஒரு பொருள் தான்.

தேவையான பொருட்கள்

  • மில்க் பௌடர் – 1 மேசைக்கரண்டி
  • முல்தானி மட்டி – 2 மேசைக்கரண்டி
  • ரோஸ்வோட்டர் – சி துளிகள்

பயன்படுத்தும் முறை

மில்க் பௌடர் மற்றும் முல்தானி மட்டியுடன் இலகுவான பேஸ்ட் கிடைக்கும் அளவுக்கு ரோஸ்வோட்டரை சேர்த்துக் கொள்ளுங்கள். முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து பின்னர் இந்த பேஸ்ட்டை கழுத்து வரையிலும் அப்ளை செய்யுங்கள். நன்கு காய விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு நன்கு கழுவுங்கள்.

மில்க் பௌடரும் தேனும்

தேவையான பொருட்கள்

  • மில்க் பௌடர் – 1 மேசைக்கரண்டி
  • தேன் – 2 மேசைக்கரண்டி
  • ரோஸ்வோட்டர் – 2 மேசைக்கரண்டி

பயன்படுத்தும் முறை

மேலே குறிப்பிட்ட அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் முகம் மற்றும் கழுத்து, கைகளில் அப்ளை செய்து கொண்டு 15 நிமிடங்கள் வரை உலர வையுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவுங்கள்.

வாரம் இரண்டு முறை இதை பின்பற்றலாம் எவ்வளவு மாற்றம் ஏற்படுகிறது என்று நீங்களே பார்த்து வியந்து போவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *