Cinema

பிரபல இசையமைப்பாளருடன் டூயட் பாடலை பாடும் அதிதி ராவ்

By  | 

அதிதி ராவ்  ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சினிமாவில் துறையில் இருந்து வருகிறார். பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் ஏற்கனவே கடந்த 2007 ஆம் ஆண்டு ‘ஸ்ரீநகரம்’ என்கிற படத்தில் நடித்திருந்தாலும் இவரை பலர் நடிகையாக அறிந்துக்கொண்டது இந்தபடத்தில் தான்.

இவர் 2012-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான லண்டன், பாரிஸ், நியூயார்க் என்ற படத்தில் முதல்முறையாக இரண்டு பாடல் பாடியிருந்தார். ‘காற்று வெளியிடை  பட ப்ரோமோசன்களின் போது, ​​’வான்’ என்ற பாடலை பாடி அசத்தியிருந்தார்.

இதையடுத்து தற்போது தமிழில் முதல்முறையாக  ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் ‘ஜெயில்’ படத்தில்  ஒரு பாடலைப் பாட இருப்பதாக ஜி.வி தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *