Cookery

கிறிஸ்மஸ் ஸ்பெஷல்: ஸ்டிக்கி பன் கேக் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • சீஸ் – 675 g
  • பௌடர் சுகர் –  80g
  • பால் – 1/2
  • வெண்ணிலா எசன்ஸ் – 120 மிலி
  • பாண் துண்டுகள் 35
  • பட்டர் – 500g
  • சீனி – 1 மேசைக்கரண்டி
  • கருவப்பட்டை – 2 தேக்கரண்டி
  • ப்ரவுன் சுகர் – 1 கப்
  • உப்பு – 1 தேக்கரண்டி
  • தேன் – 85 g
  • பெக்கன்ஸ் (pecans) – 125 g

செய்முறை

*கிறீம் சீஸ் ,கோதுமை மா ,பால்,வெண்ணிலா எசன்ஸ், சேர்த்து பீட் செய்யவும்.

*பாண்துண்டுகளை வரிசையாக அடுக்கி ஒவ்வொரு பாண் துண்டையும் ஒன்றின் மேல் ஒன்று இணைத்து கையால் ஒட்டவும்.இவ்வாறு 5 பாண் துண்டுகள்
செய்துகொள்ளவும்.

 

*பாத்திரத்தில் பட்டர்,சீனி,கருவப்பட்டை தூள் சேர்த்து கலவை செய்யவும்.

*பாண் மீது பட்டர் கலவையை பூசவும் அதன் மீது சீஸ் கலவையை பூசி உருளையாக உருட்டி கொள்ளவும்.

*பின்பு ஒவ்வொரு பாண் துண்டின் மீது வைத்து உருட்டி பெரிய உருளையாக செய்து கொள்ளவும்.

 

*பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டர், ப்ரவுன் சுகர், உப்பு,வெண்ணிலா எசன்ஸ், தேன், சேர்த்து பாகு செய்து கொள்ளவும்.

*அவன் பாத்திரத்தில் செய்த பாகை ஊற்றி பெக்கன்ஸ் (Pecans nut)சேர்க்கவும்.பிறகு உருளை செய்த பாணை வைக்கவும்.

*325˚F (165˚C) வெப்பத்தில் பேக் செய்து எடுக்கவும்.

*10 நிமிடங்கள் கேக்கை ஆற வைத்து வெட்டி வெண்ணிலா ஐஸ்கிறீம் வைத்து பரிமாறவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *