Women Achievers

உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா

By  | 

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் இரண்டாவது முறையாக இடம்பெற்றது குறித்து பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் பிரியங்கா சோப்ரா பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில் அவர் 94-வது இடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு நன்றி தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்தவுடன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பெயரை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். அவரது இன்ஸ்டா பதிவில், “உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இரண்டாவது முறையாக எனது பெயரைச் சேர்த்து கௌரவித்ததற்கு நன்றி ஃபோர்ப்ஸ். இது என்னுடைய ஆவலை மேலும் தூண்டுவதாக உள்ளது. நான் விரும்புவதைச் செய்ய இது தொடர்ந்து உந்து சக்தியாக இருக்கிறது. மீண்டும் வேலை செய்யத் தொடங்கிவிட்டேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *