Children

குழந்தைகளை சாப்பிட வைக்க சிறந்த வழிமுறை இதோ..!

By  | 

பெற்றோர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றே, குழந்தைகளுக்கு தானாக சாப்பிடுவது எப்படி, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று கற்றுத் தருவது.

குழந்தைகளை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காக நாம் அவர்களுக்கு தண்ணீர் முதல் ஆடை, உணவு, மருந்து என சின்னச் சின்னதாக

அத்தனை விஷயங்களிலும் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். அதனால் குழந்தை கொஞ்சம் வளர ஆரம்பித்ததும் அவர்களுக்கு எது தேவையோ அதை அவர்களாகவே புரிந்து கொண்டு, செய்து கொள்ள முயற்சி செய்யும் அளவுக்கு பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும்.

அதேசமயம் அவற்றை ஆரோக்கியமான முறையில் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுப்பது அவசியம். குறிப்பாக, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று குழந்தைகளுக்குக் கற்றுத் தருவது மிக அவசியம்…

குழந்தைகள் தங்களுக்குப் பிடித்ததையோ ஏதாவது விளையாட்டுப் பொருட்களையோ தொட்டு, எடுப்பதுண்டு. அதனால் எப்போது சாப்பிடுகிற பொருட்களைத் தொட நேர்ந்தாலும் அதற்கு முன்பாக கைகளை நன்கு கழுவ வேண்டும் என்று சொல்லிப் பழக்க வேண்டும்.

வண்ணத்தாள்களில் சுற்றப்படுகிற, அல்லது வண்ணங்கள் சேர்க்கப்படுகிற உணவுகளை முற்றிலும் தவிர்க்கக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *