Cinema

தடைகளை தகர்க்குமா “தெளிவுப் பாதையின் நீச தூரம்” ?

By  | 

“தெளிவுப் பாதையின் நீச தூரம்” என்கின்ற திரைப்படத்தை திரையிட இந்தியாவின் தணிக்கை துறையினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ் ஸ்டுடியோ பேரியக்கம் அருண் மற்றும் அரவிந்த் ஆகியோரின் இயக்கதில் தயாராகி உள்ளது.

இந்தச் சூழலில் இந்தத் திரைப்படத்தை சென்னையில் திரையிடுவது பெரும் சவாலாக உள்ளது.

கோவை கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இவ் திரைப்படத்தை திரையிடுவதால் மதக் கலவரம் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது என இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம், புகார் மனு அளித்துள்ளது.

 

 

இதனிடையே, தமிழ் ஸ்டூடியோ அருண் எழுதிய பதிவில்,
தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக படைப்பாளிகள் பக்கம் உள்ள நியாயங்களை, அவர்களது படைப்புகள் மக்களை சென்று சேர வேண்டிய அவசியத்தை பேசி வருகிறது. எந்த நாட்டிலும் இல்லாத அதிகார போதை இந்தியாவில் உள்ள தணிக்கை துறைக்கு மட்டும் இருக்கிறது. ஒரு படைப்பாளியின் படத்தை குறிப்பிட்ட காட்சிகளை நீக்க சொல்லவோ, அல்லது படத்தை திரையிடவே சான்று அளிக்க முடியாது என்று சொல்லக்கூடிய அதிகாரம் தணிக்கை அமைப்பிற்கு இல்லை. ஆனால் இந்திய தணிக்கை துறை தொடர்ச்சியாக இப்படியான குறுக்கீடுகளை படைப்பாளிகளிடம் நிகழ்த்தி வருகிறது. தமிழ் ஸ்டுடியோ பேரியக்கம் இதனை தொடர்ச்சியாக கண்டித்து வருகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட நண்பர் அரவிந்த் இயக்கிய தெளிவிப்பாதையின் நீச தூரம் திரைப்படத்திற்கும் இவ்வாறு தணிக்கை பிரச்னை நேர்ந்திருக்கிறது. ஆனாலும் ஒரு படைப்பாளிக்கு தன்னுடைய படைப்பாளி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பிருக்கிறது. அதில் தமிழ் ஸ்டுடியோ போன்ற சமூக திரைப்பட இயக்கங்களும் பங்கு கொள்ள வேண்டும்.

இந்த திரைப்படம் எப்படியான படம், நல்ல படமா? அரசியல் படமா? விவாதத்திற்குரிய படமான என்பதெல்லாம் படம் பார்த்தபிறகு பார்வையாளர்கள் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. பார்வையாளர்களை சென்று சேராமலேயே இது சார்ந்து கருத்துக்களை முன்வைக்க இயலாது. முதலில் படத்தை பார்வையாளர்கள் பார்க்கட்டும் என்கிற அடிப்படையிலும், படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு தமிழ் ஸ்டுடியோ எப்போதும் துணை நிற்க வேண்டும் என்கிற நோக்கத்திலும் இதனை திரையிடுகிறோம். அவசியம் வந்து பாருங்கள். படைப்பாளிகளுக்கு துணையாய் இருங்கள். திரண்டு வாருங்கள், உங்கள் வருகையை படைப்பாளிக்கு உரிய உத்வேகத்தை கொடுக்கும்…என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *