Fashion

2018 இல் ட்ரெண்டான ஆடை, அணிகலன்கள்

By  | 

திரைப்படங்களிலிருந்து ஈர்க்கப்பட்ட 2018-ம் ஆண்டின் டாப் ட்ரெண்ட்ஸ் லிஸ்ட்

தாவணி ஸ்டைல்

இந்தக் காலத்து கிராமத்துப் பெண்கள்கூட, ஜீன்ஸ், ஷர்ட் என்று தங்களை அப்டேட் செய்துகொள்கின்றனர். இதனால் பாவாடை தாவணிகளின் ஈர்ப்பு கொஞ்ச காலம் குறைந்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு புதுப்புது பேட்டர்ன், நிறங்கள், டிசைன்களென நகரப் பெண்களையும் கவரும் விதத்தில் ஏராளமாய் மார்க்கெட்டில் பாவாடை தாவணிகள் குவிந்துள்ளன. இதற்கு ஒருவகையில் திரைப்படங்களும் காரணம். இந்த ஆண்டு வெளியான மண்வாசம் கொஞ்சும் படங்களில், ‘சீமராஜா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘சண்டக்கோழி 2’ போன்ற படங்கள் முக்கியமானவை. அவற்றில்,

‘கடைக்குட்டி சிங்கம்’

சாயிஷாவின் பிங்க் ஃபாயில் ப்ரின்ட் தாவணி

‘சீமராஜா’

சமந்தாவின் மஞ்சள் மற்றும் சிவப்பு பார்டர் தாவணி

‘சண்டக்கோழி 2’

கீர்த்தி சுரேஷின் பச்சை, பிங்க், க்ரீம் காம்போ தாவணி செட் போன்றவை டாப் லிஸ்டில் உள்ளன.


காலா மூக்குத்தி

சுட்டித்தனம் மிகுந்த காலா சைலன்ட்டான தருணம், சரீனாவின் வருகையின்போதுதான். பார்க்கும்போதெல்லாம் பழைய நினைவலைகளில் மூழ்கும் காலா ஒருபக்கம் என்றால், சரீனாவின் பிரைட் லுக்கில் மெய்மறந்த ரசிகர்கள் இன்னொரு பக்கம். கைத்தறி புடவைதான். ஆனால், அதிலும் முழுநீளக்கை பிளவுஸ் உடுத்தி ஸ்மார்ட் தோற்றத்தை பெற்றிருப்பார். ‘லூஸ் ஹேர்’ காலத்தில் படிந்த கொண்டை, அதனைச் சுற்றி அன்று மலர்ந்த மல்லிகை சரம் சரீனாவுக்கே மலர்ந்தது போல இருக்கும். இவற்றைவிட டாப் ட்ரெண்டில் இருப்பது மூக்குத்திதான்.

கோலமாவு கோகிலா ஸ்கர்ட் டாப்

கோலமாவு கோகிலா படத்தில் ‘சைலன்ட் கில்லர்’ கோகிலாவின் ஆடைகள் அனைத்தும் ‘சிம்பிள் அண்ட் நீட்’. படம் முழுவதுமே ஒரே ஸ்டைல் ஆடைதான் ஆனால், நிறம், பிரின்ட் பேட்டர்ன் மட்டும் வேறுபடும். இந்த சிம்பிளான ஆடைக்கு மேட்சாக சிறிய ஜிமிக்கி, பொட்டு, மெல்லிய செயின் மற்றும் கைடிகாரம் அணிந்து, ‘நம்ம வீட்டுப் பொண்ணு’ தோற்றத்தில் மக்களின் மனதை வென்றார் நயன்தாரா.

96 குர்தா

ஆனால், இப்போதோ மஞ்சள் நிற குர்திதான். ஆடம்பரமான உடைகள் ஏதுமில்லாமல், ஜானுவுக்கே வடிவமைக்கப்பட்டதுபோல் இருந்தது த்ரிஷாவின் ஆடை. ஒரே இரவில் பயணிக்கும் இந்த கதை, பலரின் இரவுகளை ஒளிர வைத்தது, மஞ்சள் குர்தியால். எந்தப் பக்கம் திரும்பினாலும், இந்த ஆண்டின் தீபாவளி ட்ரெண்ட் இந்த குர்திதான்.

‘மஹாநதியில்’ கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த முழுநீள சிவப்புப் புடவை

U-டர்ன்னில் சமந்தாவின் ஹேர்ஸ்டைல் மற்றும் காதணிகள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *