Gallery

பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸின் கேட்ரியோனா எலிஷா க்ரே தேர்வு

By  | 

2018 ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக  பிலிப்பைன்ஸின் கேட்ரியோனா எலிஷா க்ரே (Catriona Elisa Gray ) தேர்வு செய்யப்பட்டார்.

இரண்டாவது இடத்தைத் தென் ஆப்பிரிக்காவின் டமாரின் கிரீனும், மூன்றாவது இடத்தை வெனிசுலாவின் ஸ்டெபானி கட்டர்ஸ் பெற்றார்.

2018 ஆண்டுக்கான 67வது பிரபஞ்ச அழகிப்போட்டி, தாய்லாந்தின் நான்தாபுரியின் முவாங்தாங் நகரில் நடந்தது. இதில் 94 நாட்டைச் சேர்ந்த 92 பெண்கள் பங்கேற்றனர். கடந்த 1992, 2005க்கு 13 ஆண்டுகளுக்கு பின் தாய்லாந்து பிரபஞ்ச அழகிப்போட்டியை நடத்தியது.

அரையிறுதியில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கோஸ்டா ரிகா, குராகோ, இங்கிலாந்து, ஹங்கேரி, இந்தோனேசியா, அயர்லாந்து, ஜமைக்கா, நேபாளம், பிலிப்பைன்ஸ், போலந்து, பியூரிட்டோ ரிகோ, தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா, வெனிசுலா, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பெண்கள் தகுதி பெற்றனர்.

வியட்நாம், பியூரிட்டோ ரிகோ, பிலிப்பைன்ஸ், வெனிசுலா,தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த பெண்கள் ‘டாப்-5’ல் இடம் பெற்றனர். கடும் போட்டிக்கு மத்தியில் 2018 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸின் கேட்ரியோனா எலிஷா க்ரே தேர்வு செய்யப்பட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *