Cinema

அஜித்துடன் இணைகிறார் பிரபல இயக்குனரின் மகள்

By  | 

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படத்தில் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தியில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிங்க்’. இதனை அனிருத் ராய் செளத்ரி இயக்கி இருந்தார். மூன்று பெண்களை மையமாக வைத்த இந்தக் கதையில் நடிகை டாப்சி நடித்திருந்தார். மிக முக்கியமான பாத்திரமான வழக்கறிஞர் தோற்றத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். மூன்று பெண்கள் மூன்று ஆண்களிடம் சிக்கி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்விதமாக இப்படத்தின் கதைக்களம் இருந்தது. 23 கோடி ரூபாயில் தயாரான இப்படம் 107 கோடிக்கு மேல் ஈட்டி தந்ததாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தினைதான் தமிழில் ஸ்ரீதேவியின் கணவர் ரீமேக் செய்து வருகிறார்.

அஜித்தின் கால்ஷீட்டிற்காக தமிழ்த் தயாரிப்பாளர்கள் பல காத்துக் கொண்டிருக்கும்போது எப்படி போனி கபூர் கம்பெனிக்கு இவர் படம் பண்ண சம்மதித்தார் என்று பலரும் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். இந்தக் கூட்டணி மூலம் போனி கபூர் தமிழில் முதன்முதலாக கால் பதித்துள்ளார். மேலும் இந்த கம்பெனி தென் இந்திய பட உலகில் பல படங்களைத் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஒரு தெலுங்கு நடிகையாவார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஹலோ’ நல்ல வரவேற்பை அடைந்தது. இந்தப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் கல்யாணி. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் அவார்ட்டை இவர் தட்டிச் சென்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *