Cookery

மால்டெசெர் கிறிஸ்மஸ் புடிங் கேக்

By  | 

தேவையான பொருட்கள்

புடின் செய்வதற்கு
சிவப்பு சீனி                                      1 1/2 கப்
பால்                                                        1 கப்
பட்டர்                                                    200g
சுயமாக திரட்டும் மா              1 1/4 கப்
(self-raising flour)
கோதுமை மாவு                            3/4 கப்
கொக்கோ தூள்                            3/4 கப்
முட்டை                                                4

சொக்லேட் மெல்ட்                       300 g
(dark chocolate melts)

சொக்லேட் போல்ஸ் (maltesers) 450g
ஜெரி                                                      2

ஐசிங் இலை                                    2

தடிப்பான கிரீம்                           125 ml
பட்டர்                                                   30 g
வெள்ளை சொக்லேட்              200 g

 

 

செய்முறை

ஒரு பெரிய பாத்திரத்தில் சிவப்புசீனி, பால் மற்றும் பட்டர் ஆகியவற்றை சேர்த்து மைக்ரோவேவில் அல்லது double boil முறை மூலம் உருகச்செய்து கொள்க.

இதனுடன் கோதுமை மா, மற்றும் கொக்கோ மா, சுயமாக திரலும் மா என்பவற்றை கலந்து முட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு பீட் செய்க.

கலவையை படர் பூசிய நன்ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி நீராவியில் 40 நிமிடங்கள் அவித்து கொள்க.

புடிங் தயார் ஆனதும் அதனை தட்டையான பாத்திரத்திற்கு   மாற்றி கொள்க.  சொக்லேட் மெல்ட்ஐ double boil முறைமூலம் உருகச்செய்து அதன் மீது ஊற்றி கொள்க.

சொக்லேட்    போல்ஸ்களை புடினை சுற்றிலும் அடுக்கி அலங்கரித்து குளிர்சாதன பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும்.

வெள்ளை சொக்லேட் double boil முறைமூலம் உருகச்செய்து அதனுடன் தடிப்பான கிரீம், பட்டர் ஆகியவற்றை கலந்து உருகச்செய்க. உருகிய கலவையை அறை வெப்பநிலையில் குளிர விடுக.

2 மணி நேரத்தின் பின் புடினை வெளியில் எடுத்து கொள்க. அதன் மீது வெள்ளை சொக்லேட் கலவையை ஊற்றி அதன் உச்சியில் ஜெரி , ஐசிங் இலைகள் கொண்டு அலங்கரித்து கொள்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *