Beauty

உதட்டை பிங்க் கலர் ஆக்குவது எப்படி?

By  | 
  • தேனுடன் எலுமிச்சைச்சாறு, சர்க்கரை கலந்து தினமும் பூசி வந்தால் உதடுகள் மென்மையுடனும், பளபளப்புடனும் இருக்கும். ஏனெனில், தேனில் சருமத்தில் ஈரப்பசையை தக்க வைக்கும் சக்தி இருப்பதால், அவை உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். அதற்கு சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

 

  • புதினாவை சாறு பிழிந்து சர்க்கரையுடன் கலந்து தினமும் உதட்டில் பூசி வர வேண்டும். அவை உலர்ந்தவுடன் கழுவினால் உதடுகள் அழகு பெறும்.

 

  • பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து உதட்டில் பூசி வந்தால் உதடுகள் பொலிவு பெறும். உதட்டில் உள்ள கருமை நிறத்தை மாறும்

 

  • அடிக்கடி கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை
    உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றும்.

 

  • பால் பொருட்களில் ஒன்றான தயிரில் அதிக எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு அடிக்கடி தடவி
    வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக்கொள்ள
    உதவுகிறது.

 

  • வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு
    ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *