Beauty

பீட் ரூட் ஃபேஸ் பேக்

By  | 

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
  • தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
  • கடலை மாவு -2 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு –  1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைமாவு தனியாக ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர்,ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கடைசியாக இரண்டு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறு கலந்து கொள்ளுங்கள். பேஸ்ட் பதம் வரும் வரையில் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அப்ளை செய்யும் முறை 

இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்னால் முதலில் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். க்ளின்சிங் மில்க் இருந்தால் அதனை தடவியும் முகத்தை சுத்தமாக துடைத்துக் கொள்ளலாம். இதனால் சருமத்தில் உள்ள அழுக்ககுள் வெளியேறும். அதன் பிறகு பிரஷ்ஷின் உதவியுடன் முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். கவனம் எப்போதும் கீழிருந்து மேலாக அப்ளை செய்வது நல்லது.

முகம் முழுவதும் அப்ளை செய்து முடித்ததும் கழுத்துக்கும் அப்படியே தடவுங்கள். முகத்திற்கு தருகிற முக்கியத்துவத்தை கழுத்துக்கு யாரும் கொடுப்பதில்லை. இதனால் முகம் ஒரு நிறமாகவும் கழுத்து வேறொரு நிறமாகவும் தெரியும். இதனை தவிர்க்க கழுத்துக்கும் சேர்த்தே ஃபேஸ் பேக் போடுவது நல்லது. இதனை கழுத்துக்கும் சேர்த்து போட்டபிறகு சுமார் பதினைந்து நிமிடம் கழித்து நீங்கள் கழுவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *