Fashion

இஷா அம்பானியின் மகா ஆரத்தி லெஹங்கா தயாரிப்பு முறை வீடியோ

By  | 

மனிஷ் மல்ஹோத்ரா இஷா அம்பானியின் மகா ஆரத்தி லெஹங்கா வீடியோவை வெளியிட்டுள்ளார்.

‘ஆசியாவின் மிக விலை உயர்ந்த திருமணம்’ என்ற சாதனையைப் படைத்துள்ளது, அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பெரும் தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும்,  மும்பையில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்விற்கு முன்னதாக டிசம்பர் 8 முதல் 9 ம் திகதி  ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள அரண்மனையில் சங்கீத் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் உலகப் பிரபலங்கள், பொலிவூட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கு இஷா அம்பானி அணிந்திருந்த ஆடை பிரபல ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ராவினால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.இஷா அம்பானியின்  திருமண நிகழ்விற்கான அனைத்து ஆடைகளையும் இவரே வடிவமைத்துள்ளார்.

தற்போது ஆடை வடிவமைப்பாளர்மனிஷ் மல்ஹோத்ரா இஷா அம்பானியின் திருமணத்திற்கு முன்பு நடந்த மகா ஆரத்தியில் அணிந்திருந்த அழகிய இளஞ்சிவப்பு லெஹங்காவின் தயாரிப்பு முறையை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *