Cookery

வேகன் வெண்ணிலா ஐஸ் கிரீம் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • முந்திரி பருப்பு – 1 கப்
  • தண்ணீர் – 14 கப்
  • சீனி – 1 14 கப்
  • கொக்கோ பட்டர் – 4 தேக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி
  • உப்பு – 1 தேக்கரண்டி
  • தேங்காய் பால் – 1 கப்
  • வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
  • வெண்ணிலா பீன் – 1

செய்முறை

*ஒரு பாத்திரத்தில் முந்திரி பருப்பை போடவும்.பின்பு இளஞ்சூடான நீரை ஊற்றி துணி ஒன்றினால் பாத்திரத்தினை மூடி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

*மிக்ஸியில் முந்திரி பருப்பை போட்டு ஆரம்பத்தில் குறைந்த வேகத்தில் தொடங்கி பின்பு வேகத்தை கூட்டி மென்னையாகவும் அடத்தியாகவும் 40 நிமிடங்கள் அரைத்து எடுக்கவும்.

*பின்பு அரைத்த முந்திரி பருப்பை வடி தட்டில் வடித்து எடுக்கவும்.

*சிறிய பாத்தரிம் ஒன்றை இளஞ்சூட்டில் அடுப்பில் வைத்து நீர், சீனி சேர்த்து பாகு காய்ச்சவும்.அதனுடன் கொக்கோ பட்டர், தேங்காய் எண்ணெய் ,சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

*மிக்ஸியில் அரைத்த முந்திரி பருப்பு பால்,தேங்காய் பால்,சீனி பாகு சேர்த்து நன்கு அரைக்கவும்.

* அரைத்த கலவையை பாத்திரத்தில் ஊற்றி வெண்ணிலா எசன்ஸ், வெண்ணிலா பீன், சேர்த்து மிக்ஸ் பண்ணி ஒரு மணித்தியாலம் குளிர வைக்கவும் .

*ஐஸ்கிரீம் தயாரிக்கும் மிக்ஸியில் கலவை இட்டு அடர்த்தியான கிறீம் ஆகும் வரை 1 மணித்தியாலங்கள் அரைத்து எடுக்கவும்.

*பின்பு பாத்திரம் ஒன்றில் இட்டு  இரவு முழுவதும் குயிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

*சுவையான வேகன் வெண்ணிலா ஐஸ் கிரீம்  தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *