Cinema

நடிகை சமந்தா கர்ப்பமா?

By  | 

தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்த பிரபல நடிகை சமந்தா கடந்த ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை மணம் முடித்தார். தற்போது அவர் கர்ப்பமாக உள்ளாரா என அவரது இன்ஸ்டா போஸ்ட் சந்தேகம் எழுப்பி உள்ளது.

சமந்தா அக்கினேனி கர்ப்பமாக உள்ளார் எனத் தகவல் பரவியது. ஆனால் அவர் சமீபத்தில் தன் கணவருடன் ஆம்ஸ்டர்டாமில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அவரது வயிறு பெருக்காமல் சராசரியாக இருந்தது. இதனால் அவர் கர்ப்பமாக உள்ளாரா இல்லையா என அவரது ரசிகர்களுக்கு குழப்பம் உண்டாகியுள்ளது!

சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆம்ஸ்டர்டாம் டூர் படங்களை பதிவேற்றியுள்ளார். படத்துக்குக் கீழ் தனக்கு கொஞ்சம் ஊறுகாய் கிடைக்காதா என எங்கினேன் என்றுள்ளார்.

மேலும் 2019ம் ஆண்டு நிறைய பெரிய எதிர்பார்ப்புகளுடம் மலரும் என்றுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அவர் கர்ப்பமாக உள்ளதாக தகவல் பரப்பினர்.

ஆனால் ரங்கஸ்தலம் ப்ரோமோசன் விழாவில், தாங்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பின்னர் முடிவு செய்வோம். நாங்கள் ஒரு திகதியை குறித்து வைத்துள்ளோம். அன்றுதான் குழந்தை பெற உள்ளோம் என்று கூறி இருந்தார். மேலும் இதேபோல பொய்த் தகவல் பரப்பியவர்களை ஒருமுறை கடிந்துகொண்டார் சமந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *