Cinema

நோர்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் விபரம்

By  | 

நோர்வேயில் கடந்த 9 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படம் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 20 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டுக்கான விருது பட்டியல் வெளியாகி உள்ளது.

சிறந்த படமாக பா.ரஞ்சித் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த ‘பரியேறும் பெருமாள்’ படம் தேர்வாகி உள்ளது.

96 படத்தில் ஜோடியாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த நடிகராகவும், திரிஷா சிறந்த நடிகையாகவும் தேர்வாகி உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தை இயக்கிய லெனின் சிறந்த டைரக்டராக தேர்வாகி உள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு கனா படத்தை தயாரித்தமைக்காக சிறந்த தயாரிப்பாளருக்கான விருது வழங்கப்படுகிறது.

சிறந்த இசையமைப்பாளராக பரியேறும் பெருமாள், வடசென்னை படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தேர்வாகி உள்ளார்.

சிறந்த பாடகி விருது சின்மயிக்கும், சிறந்த பாடகர் விருது அந்தோணி தாசனுக்கும் வழங்கப்படுகிறது.

கலைச்சிகரம் விருதை நடிகர் விவேக் பெறுகிறார்.

விருது வழங்கும் விழா ஏப்ரல் 27 ஆம் திகதி நாநோர்வே தலைநகரான ஓஸ்லோவில் நடக்கிறது.

சிறந்த தயாரிப்பு – எஸ்.கே. ப்ரோடக்சன், சிவகார்த்திகேயன் “கானா”

சிறந்த பாடலாசிரியர் – கார்த்திக் “காதலே காதலே”

சிறந்த சரவணன் -“ராவட்சசன” சரவணன்

சிறந்த துணை நடிகை – தீபா “கடைக்குட்டி சிங்கம்”

சிறந்த துணை நடிகர் – மயில் சாமி “அண்ணனுக்கு ஜே”

சிறந்த ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர் போர் “மேற்கு தொடர்ச்சி மலை”

சிறந்த திரைக்கதை – நெல்சன் “கோலமாவு கோக்கிலா”

சிறந்த பின்னணிப் பாடகர் ஆண் – ஆண்டனி தாசன் “சொடக்கு மேல”

சிறந்த பின்னணிப் பாடகர் பெண்: -சின்மயி “காதலே கதாலே” 96

சிறந்த ஆசிரியர் –  ரூபன் “இரும்புத்திரை”

சிறந்த சமூக விழிப்புணர்வு விருது – அருண்ராஜா காமராஜ் “கானா”

இயக்குனர் பாலு மகேந்திரா விருது – பண்டிராஜ் “கடைக்குட்டி சிங்கம்”

வாழ்நாள் சாதனையாளர் விருது – இயக்குநர் மகேந்திரன்

கே.எஸ் பாலச்சந்திரன் விருது – யோகி பாபு “கோலமாவு கோக்கிலா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *