Antharangam

அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: பிரச்சினைக்கு காரணம் இதுவா?

By  | 

கேள்வி:
நான் 33 வயது ஆண். திரு­ம­ண­மா­க­வில்லை. எனக்கு என்ன பிரச்­சினை என்றால், பெண்­களின் ஆடைகள் தற்­செ­ய­லாக நெகிழ்ந்­தாலோ அல்­லது அவர்­க­ளது உடல் அவ­ய­வங்கள் தற்­செ­ய­லாகத் தெரிந்­தாலோ என்னால் பார்க்­காமல் இருக்க முடி­ய­வில்லை. உதா­ர­ண­மாக, பேருந்தில் அமர்ந்­தி­ருக்கும் ஒரு பெண்ணின் ஆடை சற்றுக் கலைந்தால் எனது கண்கள் கட்­டுப்­பா­டின்றி அங்கே போய்­வி­டு­கின்­றன. அது­மட்­டு­மன்றி, அங்­கி­ருந்து கண்­களை எடுக்­கவும் முடி­ய­வில்லை. இந்தப் பிரச்­சி­னையை எப்­படித் தீர்க்க முடியும்?

பதில்:
முடி­யாதே!
இது பிரச்­சினை அல்ல; இயல்பு! உங்­க­ளது இயல்பு மட்­டு­மல்ல; நூற்­றுக்குத் தொண்­ணூற்­றொன்­பது சத­வீத ஆண்­க­ளி­ன­தும்தான்!

கல­வியைப் பொறுத்­த­வ­ரையில் ஆண்­களே பெரும்­பா­லான சந்­தர்ப்­பங்­களில் இயங்கும் பங்­கா­ளர்­க­ளாக இருக்­கி­றார்கள். ஏனென்றால், அவர்­க­ளுக்­குத்தான் தூண்டல் அதிகம். பெண்­ணுக்கும் தூண்டல் அதி­கம்தான் என்­றாலும் அதற்கு பல­மான ஒரு தூண்­டுகோல் வேண்டும். ஆண்­க­ளுக்கு அப்­ப­டி­யல்ல! இடம், பொருள், நேரம், காலம் என்று எது­வுமே இல்­லாமல், ஒரு பெண்ணைப் பார்த்­ததும் தூண்­டுதல் பெற முடி­கி­றது ஆண்­களால்! அத­னால்தான் இப்­ப­டி­யொரு நிலை!

அதிலும் நீங்கள் குறிப்­பிட்­டது போல, உடல் அவ­ய­ங்கள் ஆடை­களின் இடை­யிலோ, ஆடை­களை மீறித் தெரிந்­தாலோ அது ஆண்­களின் உச்­ச­பட்சத் தூண்­டு­த­லாகப் போய்­வி­டு­கி­றது.

இத­னால்தான் அவ்­வா­றான பெண்கள் குறித்த மட்­ட­மான அதே­நேரம் தவ­றான கருத்­துக்­களை ஆண்கள் தமக்குள் உரு­வாக்கிக் கொள்­கி­றார்கள்.

அதிலும் நீங்கள் திரு­ம­ண­மா­கா­தவர்! உங்­க­ளிடம் தூண்டல் சற்றுத் தூக்­க­லா­கத்தான் இருக்கும். அதற்­காக, ‘திரு­ம­ண­மானால் சரி­யா­கி­வி­டுமா?’ என்று கேட்­கா­தீர்கள். திரு­ம­ண­மா­னாலும் இந்தத் தூண்டல் தொட­ரவே செய்யும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *