Cookery

சுரைக்காய் குருமா செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • சுரைக்காய் – 1/4 கிலோ
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
  • தக்காளி – 1 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2 அல்லது மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி – சிறிது

அரைப்பதற்கு…

  • துருவிய தேங்காய் – 3 மேசைக்கரண்டி
  • கசகசா – 1 தேக்கரண்டி

செய்முறை

*முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

*பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

*பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் சுரைக்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து சுரைக்காய் நன்கு வேகும் வரை 7-10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

*அதற்குள் மிக்ஸியில் தேங்காய் மற்றும் கசகசா சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் 4-5 முந்திரியை சேர்த்துக் கொண்டால், குருமா இன்னும் சுவையாக இருக்கும்.

*இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சுரைக்காயுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், சுரைக்காய் குருமா தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *