Cookery

அவல் ஜவ்வரிசி பொங்கல் செய்முறை !

By  | 

தேவையானவை பொருட்கள்

  • அவல்-1 கப்
  • ஜவ்வரிசி-1 கப்
  • பாசிபருப்பு-அரை கப்
  • தேங்காய் துருவியது-அரை கப்
  • நெய்-5 தேக்கரண்டி
  • முந்திரி பருப்பு-அவரவர் விருப்பம்
  • உப்பு-தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள

  • கடுகு-அரை ஸ்பூன்
  • ஜீரகம்-1 தேக்கரண்டி
  • மிளகு-1 தேக்கரண்டி
  • பச்சைமிளகாய்-2
  • கறிவேப்பிலை-சிறிது
  • துருவிய இஞ்சி-சிறிது

செய்முறை 
முதலில் பாசிபருப்பை வேக வைத்துகொள்ளவும்.ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். அவலை கழுவி நீரை வடித்து ஊறவைத்துகொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்துகொள்ளவும்

மீதமுள்ள நெய்யில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு வதக்கவும்.அது வதங்கியது வேகவைத்த பாசிபருப்பு,ஊறவைத்த ஜவ்வரிசி,அவல் இவற்றை போட்டு நன்கு கிளறவும்.

கடைசியில் துருவிய தேங்காயை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.அதில் வருத்த முந்திரியை அலங்கரிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *