Health

இஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

By  | 

குளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின் பழக்கம். மேலும் வீட்டில் அந்த நேரத்தில் தேநீரை தயாரித்தல் அதில், புதினா இலை மற்றும் எலுமிச்சையை கலந்து குடிப்பது வழக்கம்.

இந்த பழக்கமும் அந்த சுவையும் நமது நாக்கில் பட்டு தொடையில் இறங்கி, அந்த காரத்துடன் செல்லும் போது அந்த காரத்தையும்., சுவையையும் விளக்க வார்த்தைகள் கிடையாது.

இந்த இஞ்சி தேநீரை குடிப்பதன் நன்மைகள்

நீண்ட தூரத்திற்கு பயணம் மேற்கொள்பவர்கள் அல்லது மலைகளின் மீது பயணம் செய்யும் போது தலைசுற்றல் காரணமாக வாந்தி ஏற்படுவது வழக்கம். அவ்வாறு வாந்தி ஏற்படும் போது மற்றும் பயண சுமையால் மலச்சிக்கலை தவிர்க்க இஞ்சி தேநீர் பருகலாம்.

இந்த தேநீரை பருகுவதால் ஜீரண சக்தியை அதிகப்படுத்தி., பசியின்மையை போக்கும் மேலும் அதிகமான உணவு சாப்பிட்டுவிட்டோம் என்று நினைத்தால் இஞ்சி தேநீர் அருந்தும் பட்சத்தில் எளிதில் ஜீரணமாகிவிடும்.

நமது உடம்பில் கிருமிகளால் வரும் கட்டிகளை எளிதில் எதிர்க்கும் குணமானது இயற்கையாகவே இஞ்சியில் அடங்கியுள்ளது. மேலும் மூட்டு வலி மற்றும் தசை வலி போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து.

பொதுவாக குளிர் காலங்களில் ஏற்படும் சுவாசக்கோளாறுகள் மற்றும் சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் சுவாச பிரச்சனைகள் போன்றவை வராமல் தடுக்க இயலும்.

இஞ்சியில் இருக்கும் சத்துக்களான வைட்டமின்கள்.மினரல்கள் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகியவை இரத்த ஓட்டங்களை சீர்படுத்தி கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்தி இதய நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிக்கு இஞ்சியை கொதிக்கவிட்டு அந்த நீரினை ஒரு துணியின் மூலமாக அடிவயிற்றில் ஒட்டி எடுத்தால் வலிகுறையும்.தசைகள் சிறிது தளர்வாகும்.இஞ்சி தேநீருடன் தேனை கலந்து குடித்து வந்தால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நல்லது.

இஞ்சி இருக்கும் ஆண்டிஆக்சிடண்டுகள் (Antioxidants) கிருமிகளுக்கு எதிராக போராடும் என்பதால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

இஞ்சி மனஅழுத்தத்தை கட்டுப்படுத்தும் என்பதால். இஞ்சியின் மூலமாக பல்வேறு மனஅழுத்தம் குறைபாடுகளுக்கு மருந்தாக செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *