Cinema

வெளிநாட்டு காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ரிச்சா

By  | 

நடிகை ரிச்சா, வொஷிங்டன்னை சேர்ந்த ஜோ லிங்கேலாவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். கூடியவிரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் இரு துருவங்களாகிய சிம்பு மற்றும் தனுஷூடன் ஒரே நேரத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். சிம்புவுடன் இவர் நடித்த ‘ஒஸ்தி’ திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி வெளியானது.

இந்த படம் வெளியான இரண்டே வாரத்தில் தனுஷுடன் இவர் நடித்த ‘மயக்கம் என்ன’ திரைப்படம் வெளிவந்தது. இரண்டு படங்களும் வசூல் அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் அதன்பின் ரிச்சாவுக்கு வேறு தமிழ்ப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *