
Fashion
மனித சருமத்தை ஒத்த காலணி
தற்போதைய காலத்தில் உள்ள இளையதலைமுறைகளிடம் கண்டுபிடிப்புகளின் தாக்கமும், நவநாகரீகத்தின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் முன்பு. ஆனால், தற்போது ஆள் மட்டும் பாதி என்ற நிலைக்கு வந்துவிட்டனர். நாம் அனைவரும் அணிந்துள்ள ஆடையின் நிறத்துக்கு தகுந்தாற் போல் அணிகலன்களை அணிவதும், காலணிகள் அணிவதும் அனைவருக்கும் வழக்கமான ஓன்று. இந்நிலையில், மனிதனின் காலை போன்றே ஒருவர் காலணி ஒன்றை தயாரித்துள்ளார். அதை நாம் பார்த்தால் நமக்கே இது காலா அல்லது காலணியா என்று ஒரு நிமிடம் தலை சுற்றி விடும்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல அணிகலன்களின் பிராண்டான ஃபீகல் மேட்டர்தான் இந்த ஷூவை தயாரித்துள்ளது. அந்த காலணி சிலிகான் மெட்டீரியலால் உருவானது. முட்டி வரை நீளமாக அந்த காலணி தயாரிக்கப்பட்டுள்ளது. மனித சருமத்தை ஒத்த நிறத்தில் சமச்சீரற்ற தோல் போல் தோற்றமளிக்கிறது.
பாதங்களுக்கு கீழ் நீண்ட கூர்மையான ஹீல் பொருத்தப்பட்டுள்ளது. அதுவும் மனிதக் காலிலிருந்து இயற்கையாக நீண்டிருக்கும் ஹீல் போன்று காட்சியளிக்கிறது. பாதத்திற்கு மேல் கூர்மையான கொம்பு போல் நீண்டிருக்கிறது. பார்ப்பதற்கு பயமுறுத்தும் அரக்கன் தோற்றத்தைப் போல் இருக்கிறது அந்த ஷூ ஜோடி.
0 comments