Fashion

செல்லப் பிராணிகளின் தோற்றத்தில் காலணிகள்

By  | 

செல்லப் பிராணிகள் நம் குடும்பத்தில் ஒருவராக பயணிக்கிறது.இருப்பினும் வெளியே எங்காவது சென்றால் அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் செல்லப் பிராணியை பிரிந்த சோகம் வாட்டுகிறது. இதை சரி செய்ய அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் புது முயற்சியைக் கையாண்டுள்ளது.

ஆம்,கன்ட்ல் க்ளோன்ஸ் (Cuddle clones) செல்லப் பிராணிகளுக்காக இயங்கும் அமெரிக்க நிறுவனமாகும். அதன் இணையதளத்தில் செல்லப் பிராணிகளின் புகைப்படங்களை அப்லோட் செய்து அதன் தோற்றத்தை தெளிவாகப் பதிவிட வேண்டும்.பின் அந்நிறுவனத்தார் அதேபோன்ற ஒரு பொம்மையை உருவாக்கி உங்கள் இல்லத்திற்கே அனுப்பி வைப்பார்கள். அது எலி, பூனை, நாய் என எதுவாக இருந்தாலும் அதன் சாயல் கொஞ்சம் கூட மாறாமல் தயார் செய்து அனுப்பி வைப்பார்கள்.  உண்மையிலேயே செல்லப் பிராணியையும், அந்த பொம்மையையும் அருகருகே வைத்தால் எது நிஜம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.

தற்போது அவர்கள் புது முயற்சியாக செல்லப்பிராணிகளின் உருவத்தில் காலணிகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதனை ‘பெட் ஸ்லிப்பர்’ என அழைக்கின்றனர்.

செல்லப் பிராணிகளின் தோற்றம் மாறாமல் அப்படியே காலணிகளாக தயாரித்து அனுப்புகின்றனர்.

இந்த புதிய முயற்சி செல்லப் பிராணிகளை வைத்திருப்போரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் மிகவும் மகிழ்ந்து அதை தங்களில் சமூக வலைதலகளிலும் புகைப்படமெடுத்து பதிவிடுகின்றனர்.

View this post on Instagram

#threeofRi

A post shared by raine (@rainetrain) on

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *