Beauty

முடி வளர்ச்சிக்கு தயிரை எவ்வாறு உபயோகிக்கலாம்?

By  | 

தயிர் ஒரு பொதுவான இயற்கை முடி பராமரிப்பு பொருளாக உள்ளது. இதில் வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இதனால் முடி வளர்ச்சிக்கு  தயிர் உதவுகின்றது.

தயிர் எவ்வாறு முடி வளர்ச்சிக்கு உதவுகிறது?

  • தலையில் உள்ள பொடுகை போக்க உதவுகிறது.
  • தலை முடியை குளிர்சியடைய செய்து நீண்ட நேரம் ஈரலிப்புடன் இருக்க உதவுகிறது.
  • முடி உதிர்வை தடுத்து முடியின் வேர்கள் ஆரோக்கியமாக இருக்க வழிவகுக்கிறது.
  • தலையில் உள்ள சருமத்தின் பி எச் பெறுமானத்தை கட்டுப்படுத்துகிறது.
  • யோகட் தலை முடி மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்க உதவுகிறது.

யோகட் முட்டை பேஸ்ட்

  • யோகட் – 1
  • முட்டை – 2 மேசைக்கரண்டி

உபயோகிக்கும் முறை

பாத்திரத்தில் முட்டையை போட்டு பீட் செய்யவும்.பின்பு யோகட் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.

இதை உங்கள் முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசி  20-30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும் .  சேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள். சிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.

வாழைப்பழம் யோகட் பேஸ்ட்

  • வாழைப்பழம் – 1/2
  • யோகட் – 1 மேசைக்கரண்டி
  • தேன்- 3 மேசைக்கரண்டி
  • எழுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி

உபயோகிக்கும் முறை

பாத்திரம் ஒன்றில் வாழைப்பழத்தை இட்டு நன்கு மசிக்கவும்.

மசித்த வாழைப்பழத்துடன் யோகட்,தேன்,எழுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்யவும்.

இதை முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசி  25-30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஒரு சேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள். சிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.

யோகட் ஒலிவ் ஒயில் பேஸ்ட்

  • ஒலிவ் ஒயில் – மேசைக்கரண்டி
  • யோகட் – 1 கப்
  • எழுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
  • தண்ணீர் – 2 கப்

உபயோகிக்கும் முறை

பாத்திரம் ஒன்றில் ஒலிவ் ஒயில், யோகட் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்பு எழுமிச்சை சாறு,தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.

முடியை சேம்போவால் கழுவவும்.

பின்பு செய்த கலவையை முடியில் பூசி 20 நிமிடங்கள் வைக்கவும்.

குளிர்ந்த நீரினால் முடியை நன்றாக கழுவவும்.

யோகட் தேன் பேஸ்ட்

தேவையான பொருட்கள்

  • யோகட் – 1\2 கப்
  • தேன் – 1 மேசைக்கரண்டி
  • வினிகர்- 1 மேசைக்கரண்டி

உபயோகிக்கும் முறை

அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் செய்யவும்.

இதை உங்கள் முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும் .

சேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள்.சிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.

யோகட் கற்றாளை

தேவையான பொருட்கள்

  • கற்றாளை – 3 மேசைக்கரண்டி
  • யோகட் – 2 மேசைக்கரண்டி
  • ஒலிவ் ஒயில்- 2 மேசைக்கரண்டி
  • தேன்- 1 மேசைக்கரண்டி

உபயோகிக்கும் முறை

அனைத்து பொருட்களையும ஒன்றாக சேர்த்து பேஸ்ட் செய்யவும்

இதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் பூசி 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்யவும்.

பின்பு முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசுங்கள் யோகட் பேஸ்ட் பூசி 30 நிமிடங்கள் வைக்கவும்.

சேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள்.சிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.

யோகட் ஆணை கொய்யா

தேவவையான பொருட்கள்

  • யோகட் – 1 கப்
  • ஆணை கொய்யா – 1\2
  • ஒலிவ் ஒயில் – 2 மேசைக்கரண்டி
  • தேன் – 1 மேசைக்கரண்டி

ஆணை கொய்யாவை நன்கு மசிக்கவும். பின்பு மற்றைய பொருட்களை
சேர்த்து நன்கு பேஸ்ட் செய்யவும்.

இதை உங்கள் முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும் .

சேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள்.

சிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.

யோகட் கறிவேப்பிலை

தேவையான பொருட்கள்

  • யோகட் – 1 கப்
  • கறிவேப்பிலை – சிறிதளவு

உபயோகிக்கும் முறை

கறிவேப்பிலையை மிக்சியில் நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்

பாத்திரத்தில கறிவேப்பிலை பேஸ்ட் யோகட் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்

இதை உங்கள் முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும் . சேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள்.

சிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.

யோகட் தேங்காய் பால்

தேவையான பொருட்கள்

  • யோகட் – 1\2 கப்
  • தேங்காய் பால் – 1 கப்
  • கற்பூர எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

உபயோகிக்கும் முறை

பாத்திரம் ஒன்றில் மேற்கூறிய பொருட்களை சேர்த்து கலவை செய்து கொள்ள வேண்டும்

இதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் பூசி 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்வும்.

2 நிமிடங்கள் கழித்து சேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள்.
சிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.

யோகட் வெந்தயம் பேஸ்ட்

தேவையான பொருட்கள்

  • யோகட் – 1 கப்
  • வெந்தயம் – ஒரு கைப்பிடி

உபயோகிக்கும் முறை

பாத்திரம் ஒன்றில் வெந்தயம் யோகட் சேர்த்து  இரவு முழுவதும் நன்கு ஊற வைக்கவும்.

காலையில் ஊறிய வெந்தயத்தை மிக்சியில் நன்கு அரைத்து பேஸ்ட் செய்யவும்.

இதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் பூசவும்.

ஒரு மணித்தியாலங்கள் கழித்து சேம்போவினால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள்.

சிறந்த பயனை பெற வாரம் இரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *