Health

மாம்பழத்தை பார்த்து வாங்க டிப்ஸ்

By  | 

உலகிலேயே மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழம். சிறுவர் முதல் பெரியோர்வரை இதன் சுவைக்கு அடிமை. மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன.

மாம்பழ சீசனில் எல்லா இடங்களிலும் மாம்பழ வியாபாரிகளை காணலாம். சில வியாபாரிகளின் வியாபார உக்திகளால் மாம்பழத்தின் இயற்கையான சுவையை நாம் சுவைக்க முடியாமல் உள்ளது.
ஆனால் மாம்பழத்தை பார்த்து வாங்கதெரிந்து கொண்டால் இயற்கையான சுவையையும் குணநலத்தையும் நாமும் அனுபவிக்கலாம்.

“95 சதவிகித மாம்பழங்கள் கால்சியம் கார்பைட்டை (Calcium Carbide) பயன்படுத்தி செயற்கையான முறையில் பழுக்கவைக்கப்படுகின்றன. கால்சியம் கார்பைட்டு ஸ்ப்ரே அடிக்கப்பட்ட மாம்பழங்கள் பளபளவென இருக்கும். அதனால், பழத்தில் இயல்பாக இருக்கும் கறுப்பு நிறப் புள்ளிகள் தென்படாது. இதனால் மாம்பழத்தில் இருக்கும் சத்துகள் குறைந்துவிடுகின்றது.

மாம்பழங்களை எப்படிப் பார்த்து வாங்குவது?

நல்ல பழங்கள் எவை என சில அறிகுறிகளைவைத்துக் கண்டுபிடித்துவிடலாம். அனைத்து வகைப் பழங்களையுமே தட்டிப் பார்த்து வாங்கலாம். தட்டும்போது சத்தம் சற்று குறைந்திருந்தாலோ, சத்தம் கேட்காமலேயே இருந்தாலோ அழுகியது அல்லது அதிகம் கனிந்தது என்று அர்த்தம்.

வாங்கும்போது, நிச்சயம் கவனிக்கவேண்டிய ஒரு விடயம், பழத்தில் இருக்கும் கறுப்பு நிறப் புள்ளிகள். இவை இல்லாத பழங்கள், ஆபத்தானவை; செயற்கை முறையில் கனியவைக்கப்பட்டவை. கறுப்பு புள்ளிகள் உள்ள பழங்களில்தான் சுவை அதிகமாக இருக்கும். அவைதான் ஒரிஜினல்!

மாம்பழத்தின் உள்ளே காணப்படும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு கலந்த நிறம் இயற்கையானது. வெறும் மஞ்சள் நிறச் சதையுள்ள பழம் என்றால், அது இரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டது எனப் புரிந்துகொள்ளலாம்.

இயற்கையாகப் பழுத்த மாம்பழங்களில் அனைத்துப் பகுதிகளும் சமமாகப் பழுத்திருக்காது. சில இடங்கள் கடினமாக, பழுக்காமல் இருக்கும். பழத்தின் மேல் பால் கறை இருக்காது. பார்க்க, பளபளப்பாக இருக்காது. இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *