Health

இதய ஆரோக்கியத்தை பேண கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஏழு வழிமுறைகள்

By  | 

உலகளவில் இதய பாதிப்பு, மாரடைப்பு, இதய செயலிழப்பு, இதய வால்வு பாதிப்பு, இதய இரத்த குழாய்கள் பாதிப்பு . இதயத்துடிப்பு பாதிப்பு என இதயம் தொடர்பான பல பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.

அவர்களிடம் இதயத்தை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அதனை சூழல் கருதியும், மனநிலை கருதியும் வேறு சில காரணங்களாலும் புறந்தள்ளுகிறார்கள். இதனால் அவர்கள் இதயத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகே அது குறித்த ஆரோக்கிய குறிப்பை பின்பற்ற தொடங்குகிறார்கள். இந்நிலையில் இதயத்தை காக்கும் ஏழு எளிய வழிமுறைகள் பின்வருமாறு,

  • புகை பிடிக்கக்கூடாது.
  • உடற்பயிற்சியை நிறுத்தக்கூடாது.
  • உடல் எடையை அதிகரிக்கக்கூடாது.
  • உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கவேண்டும்.
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவேண்டும்.
  • இரத்தத்தில் கொலஸ்ட்ரோல் எனப்படும் கொழுப்பின் அளவு அதிகரிக்காமல் தற்காத்துக் கொள்ளவேண்டும்.
  • இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவேண்டும்.

இந்த ஏழு விடயங்களில் எதிர்மறையான எண்ணங்களுக்கு இடம்கொடுக்காமல், உறுதியாக இறுதி வரை பின்பற்றினால் உங்களின் இதயம் ஆரோக்கியமாக இயங்கிக் கொண்டேயிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *