Entertainment

உதட்டில் உணவகத்தின் பெயரை பச்சைக் குத்திக் கொண்ட பெண்

By  | 

ஒரு உணவகத்தின் உணவு பிடித்திருக்கிறது என்றா அதிக பட்சமாக என்ன செய்வீர்கள்? அதிகமாக அதை வாங்கி உண்போம் அல்லது மற்றவர்களுக்கும் பரிந்துரைப்போம். ஆனால் மெல்போர்னைச் சேர்ந்த பெண் அந்த உணவகத்தின் பெயரை உதட்டில் பச்சைக் குத்தியிருக்கிறார்.

ஆம், மெல்போர்னைச் சேர்ந்த 20 வயது பெண் கே.எஃப்.சி சிக்கன் எற்றால் கொள்ளைப் பிரியமாம். அதனால் தன் உதட்டில் கே.எஃப்.சி (KFC) என பச்சைக் குத்தியிருக்கிறார். இதனால், தனக்கு இலவசமாக கே.எஃப்.சி உணவு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

இது குறித்து அந்தப் பெண் கூறிய போது ”எனக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் கே.எஃப்.சி சிக்கன் என்றால் உயிர். தினமும் கே.எஃப்.சி சிக்கன் உண்பேன். என் வீட்டு நாய்க்குக் கூட “ நக்கட்ஸ் ” என்றுதான் பெயர் வைத்திருக்கிறேன். அந்த அளவிற்கு சிக்கன் மீது விருப்பம். என் வீட்டில் முதல் முறையாக காட்டிய போது அது போலியான ஸ்டிக்கர் என்றே நினைத்தார்கள்.

பின் அவர்களுக்கு உண்மை தெரிந்ததும் எதுவும் சொல்லவில்லை. எனக்கு வலியும் அதிகம் ஏற்படவில்லை. சாதரணமாகவே உணர்ந்தேன். கே.எஃப்.சி சிக்கன் இலவசமாக கிடைத்தால் பேராணந்தம் அடைவேன்”. எனக் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *