
Cookery
சைனீஸ் ப்ரை எள்ளு உருண்டை செய்முறை!
தேவையான பொருட்கள்
- கௌப்பி – 1/4 கப்
- தண்ணீர் – 4 கப்
- சீனி – 1/4 கப்
டோக் செய்வதற்கு
- வெந்நீர் – 2/3 கப்
- சிவப்பு சீனி – 1/2 கப்
- அரிசி மா – 2 கப்
- எள்ளு – 1/2 கப்
- மரக்கறி எண்ணெய் – 7 கப்
செய்முறை
*பாத்திரம் ஒன்றில் கௌப்பியை போட்டு தண்ணீரில் 6 மணித்தியாலங்கள் ஊற வைத்து நீரை வடிக்கட்டி எடுக்கவும்.
*நீரை வடி கட்டிய பின் தண்ணீர் மற்றும் தேவையான இளவு ஊற்றி 1 மணித்தியாலங்கள் வேக வைக்கவும்.பின் அதில் சீனியை சேர்த்து கட்டி பதம் வரும் வரை அடுப்பில் வைத்து கிளறி பாத்திரம் ஒன்றில் போட்டு வைக்கவும்.
*பாத்திரம் ஒன்றில் வெந்நீரை ஊற்றி அதில் சிவப்பு சீனி சேர்த்து கலவை செய்யவும்.
*மற்றொரு பாத்திரத்தில்அரிசி மா போட்டு அதில் சிவப்பு சீனி கலவையை சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
*மா கலவையை எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி வட்டமாக தட்டிக் கொள்ளவும்
*வட்டமாக தட்டிய மா கலவையில கௌப்பி கலவையை வைத்து உருண்டையாக உருட்டி கொள்ளவும்
*உருண்டைகளை எடுத்து எள்ளில் தோய்த்து எடுத்து கொள்ளவும்.
*எள்ளில் தோய்த்த உருண்டைகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் .
*சுவையான சைனீஸ் ப்ரை எள்ளு உருண்டை தயார்!
0 comments