Cinema

அசர வைக்கும் அனுஷ்காவின் புதிய தோற்றம்

By  | 

‘ ரெண்டு ‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுஷ்கா. இவரது நடிப்பில் வெளியான சிங்கம், அருந்ததி, தாண்டவம், என்னை அறிந்தால், தெய்வத் திருமகள், இஞ்சி இடுப்பழகி, பாகுபலி உள்ளிட்ட படங்கள் மிகப் பிரபலமானவை.

கடைசியாக ‘ பாகமதி ‘படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அனுஷ்கா ஷர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் நேற்றைய தினம் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அனுஷ்காவின் புகைப்படங்களை லூக் கவுடின்ஹோ, தனது சமூகவலைத்தளப்பகுதியில் பகிர்ந்துள்ளார்.

அதில், ” ஒரு புதுமையான விஷயத்தை வழங்கப் போகிறோம். எங்கள் நோக்கம் நாட்டின் ஆரோக்கியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே. வாழ்க்கை முறை, பாதுகாப்பு போன்றவற்றில் ஆர்வத்துடன் முதலீடு செய்யத் தவறாதீர்கள். உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்துங்கள் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, மாதவனுடன் இணைந்து ‘சைலன்ட்’ என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *