Cinema

சிவகார்த்திகேயனுக்கு ராஜேஷின் பிறந்தநாள் பரிசு – ‘மிஸ்டர்.லோக்கல்’ டீசர் இன்று வெளியீடு

By  | 

சிவகார்த்திகேயன் நயன்தாரா ஜோடி சேரும் இரண்டாவது திரைப்படமான “மிஸ்டர்.லோக்கல்” மே மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.


இவ் திரைப்படத்தில் ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.


காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இவ் திறைப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


சிவகார்த்திகேயன் – நயன்தாராவுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு திரைக்கதை உருவாக்ப்பட்டுள்ளது. வெளியாகி உள்ள டீசரில் நயன்தாரா பேசும் ‘லோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது’ என்ற வசனம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *