Cookery

மைக்ரோ வேவ் சமையல் முறை – 15 நிமிடங்களில் தென்னிந்திய கத்தரிக்காய் கறி

By  | 


சமையல் நேரம் – 15 நிமிடம்

தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
மசாலா தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
நடுத்தர கத்திரிக்காய் – 2
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
புளி கரைசல் – 3 தேக்கரண்டி

South Indian Eggplant Curry

செய்முறை
ஒரு மைக்ரோ பாத்திரத்தில் எண்ணெய், மசாலா தூள், மஞ்சள் ஆகியவற்றை உயர் வெப்பத்தில் 90 வினாடிகளுக்கு சமைத்துக்கொள்க.


மற்றொரு கிண்ணத்தில், 90 விநாடிகளுக்கு உயர் வெப்பத்தில் தேங்காய், இஞ்சி, உப்பு மற்றும் புளி குழம்பு கலவையை சேர்த்து சமைக்கவும்.


கத்திரிக்காய்களின் முனைகளை நீக்கி அங்குல துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் இட்டு 1 தேக்கரண்டி எண்ணை சேர்த்து கிளரி ஒயில் பேபர் மூலம் பாத்திரத்தை மூடி 6 நிமிடங்களுக்கு சமைத்துக் கொள்க.


ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள கலவைகளை கத்தரிக்காய் உடன் சேர்த்து உயர் வெப்பத்தில் 2 அல்லது 3 நிமிடங்களுக்கு திறந்து வைத்த சமைத்து கொள்க.
தயாரான கறியை கொத்தமல்லி கொண்டு அழகுபடுத்தி சூடாக பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *