Cinema

தன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்

By  | 

மீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும் எந்தப் பதிலும் சொல்லாமலே இருந்துவந்தார். இந்த நிலையில், கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழித்து, முதல் முறையாகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மீ டூ பற்றிய தன்னுடைய கருத்தையும், தன்மீதான குற்றச்சாட்டுக்கு பதிலையும் தெரிவித்திருந்தார்.

அதில், ‘சமீப காலமாக ட்விட்டரில் என்னைப் பற்றி அநாமதேய புகார்கள் சொல்லப்படுகின்றன. கடந்த காலத்தில், என்னுடைய நடத்தையால் யாராவது மனம் வருந்தியிருந்தால், அவர்கள் என்னை நேரடியாக அணுகுங்கள். என்மீது தவறு இருக்கும்பட்சத்தில், அதற்காக நான் மன்னிப்பு கேட்கவும் தயார். அதற்கான விளைவுகளை, அது சட்டரீதியான நடவடிக்கை என்றாலும் அதற்கு உட்படவும் நான் தயாராகவே இருக்கிறேன்’ என்று எழுதியிருந்தார். மறுபடியும் கார்த்திக்கு போன் செய்தோம். இந்த முறை பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *