Quizzes

“ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

By  | 

இ‌ந்த பழமொ‌ழி‌ உருவானத‌ற்கு ஒரு புராண‌க் கதை உ‌ண்டு. மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து
கொள்ளுமாறு கேட்கின்றாள் .அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கௌரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம்
எனவே செய்நன்றி கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன்
கூறுகின்றான்.

அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான் நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பது இதன் அர்த்தமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *