Fashion

ஆடை அணிய சில டிப்ஸ்

By  | 

மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையும் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங்கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரும். என்ன மாதிரி­யான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியாமலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள். வீட்டில் அணிய வேண்டிய ஆடை­களை வெளியிலேயேயும், திருமணம் போன்ற பார்ட்டிகளுக்கு சாதாரண­மாக­வும் உடுத்திச் செல்வார்கள்.

ஆடை அணிய சில டிப்ஸ்
தினசரியும் நாம் விலை உயர்ந்த ஆடைகளை அணிய முடியாது. ஆனால், சாதாரண கொட்டன் துணி­களை உடுத்தினால்கூட நேர்த்தியாக சுருக்கமின்றி அயர்ன் செய்து உடுத்தினால் அது அழகாக தெரியும்.
எனவே, பெஷன் என்ற பெயரில் கண்டதையும் உடுத்தாமல் நமக்கு வசதியான ஆடைகளை அணிவதே நம் அழகை அதிகரித்துக் காட்டும்.

சீசனுக்கு ஏற்ற ஆடைகள்
ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.சீசனுக்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதை­யும் மகிழ்ச்சிப்­படுத்­தும்.
கோடை­யில் கொட்டன் ஆடைகள் அணி­வது உடலையும் உள்­ளத்தையும் உற்சாகப்படுத்தும்.

ஆடைகளின் நிறம்

ஆடைகளின் வண்ணங்கள் மென்மை கலந்ததாக இருப்பது நல்லது.கறுப்பு, சிவப்பு மற்றும் “பளிச்’ வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால், உட­லின் நீர்ச்­சத்து குறைந்துவிடும். எனவே, கோடை­யில் உடலை இறுக்­காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

வெள்ளிக்கிழமை உடை
வெள்ளிக்கிழமை என்றாலே ஸ்பெசல்­தான். பெண்கள் என்றால் பட்டு வகைய­றாக்­களில் தான் அலு­வலகத்­திற்கு கூட செல்வார்கள். வெள்­ளிக்­கிழமையன்று வெள்ளை நிற ஆடை­யில் செல்வது பாந்த­மாக இருக்கும் எ­ன்கின்­றனர் நிபுணர்கள்.பணி­யிடங்களுக்கு ஜீன்ஸ் ஆடை ஏற்றதல்ல என்பதே நிபுணர்­களின் அறிவுரை.

சுய விமர்சனம்
எந்த ஒரு ஆடை அணிந்த உடன் அது நமக்கு ஏற்றதாக இருக்கிறதா?இது பிட் ஆகிறதா? என்று கண்ணாடியின் முன் நின்று உங்களுக்கு நீங்களே சுய விமர்­சனம் செய்துகொள்ளுங்கள்.

சரி­யான உள்ளாடைகள் அணிவது தன்­னம்­பிக்­கையை அதிகரிக்கும். அள­வான நகைகள் அதேபோல் அணியும் ஆடை­களுக்கு ஏற்ற நகைகள் அணிய­­வேண்டும்.
இருக்கி­றது என்பதற்­காக அள்ளிப் போட்டுக்­கொள்ள வேண்­டாம். அதிகமாக போட்­டால் அழகு கூடாது ஆபத்துதான் அதிகமாகும்.

ஹேர்­பேண்ட், காதணி, காலணி போன்­றவை மேட்சாக இருந்தால் கூடு­தல் அழகுதான். அதற்கேற்ப பொருட்­களை நாம் தெரிவு செய்ய­வேண்டும்.

மதிப்பு அதிகரிக்கும்
ஆடைகள் என்பது நம் மதிப்போடு தொடர்­புடையது. ஏனோ தானோ என்று உடுத்துவதை விட நமக்கு ஏற்ற உடைகளை தேர்ந்தெடுத்து அணி­வதே அழகையும், மதிப்பையும் அதிகரிக்கும்.

விழாக்கால ஆடைகள்
காக்ரா சோலி திருமணம், ரிசப்சன் போன்ற விசேஷங்களுக்கு ஏற்றது.வெளிர் நிறங்களில் வேலைப்பாடு செய்த காக்ரா சோலியில் நீங்கள் ஜொலிக்­கப் போவது நிச்சயம். ஸ்‌ப்லிட் ட்ரெஸ் இந்த நீண்ட ட்ரெஸ்ஸில் உள்ள கட் நடக்கும் போது உங்கள் அழகான கால்களை தெரிய­வைக்கும். எடை அதிகம் உள்ளவர்களும் அணியலாம். ட்ரா ஸ்ட்ரிங் ஷோட்ஸ், ஸ்ட்ரெச் டொப்ஸ் போ‌ன்றவை உட‌ல் அமை‌ப்பு அழகா‌க‌‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் வா‌ங்‌கி அ‌ணியலாம்.
தேவையான அளவுக்கு இறுக்கி கட்டக்கூடிய வசதி உள்ள ஷோட்ஸ்சு‌ம் இ‌ந்த வகை‌யி‌ல் உ‌ண்டு. இது உடலோடு ஒட்டியபடி இருக்கும். பட்டன் ஜீன்ஸ், மல்டி கலர் ஷேர்ட் போ‌ன்றவை காலேஜ், ‌விரு‌ந்து ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌க்கு அணியலாம்.மொடனாகவும் அதே நேரத்தில் அடக்கமாகவும் தோன்ற வைக்கும். உங்களுக்கு மிதமான தோற்றம் வேண்டுமானால் பாந்தினி வேலை பார்டரில் செய்யப்பட்ட ஜீன்ஸ் அணிந்து, சாதாரண கலர் சட்டையுடன் அணியலாம்.
பாந்தினி பெல்ட் மற்றும் ஸ்கார்ஃப் அணிய­லாம். டெனிம் துணியை மேலும் அழகுபடுத்துவது இப்போது பென்சி ஆகி­விட்டது. கற்பனை வளம் மிக்க­வர்கள் டெனிமில் லேஸ்வைத்து தைத்துக்கொள்ளலாம். அல்லது டெனிம்மில் தங்க, வெள்ளி நிற நூல் வேலைகள் வைத்து தைத்துக் கொள்ளலாம்.

மினி உடைகள்
கல்லூரிக்கு செல்லும் பெண்கள் சிலர் மினி ட்ரஸ் அணிந்து செல்­­வார்கள். உங்களுக்கு வேண்டு­மானால் அது ஏற்றதாக இருக்கலாம். ஆனால், உங்களை பார்ப்பவர்களுக்கு அது உறுத்த­லாக இருக்கும். ஸ்போர்ட்ஸ் மினி உடைக‌ள் டென்­னிஸ், பாஸ்­கெட்போல், வொலிபோல் போ‌ன்ற ‌விளையா‌ட்டுகளை ‌விளையாடு‌ம் போது மட்டுமே அணிய ஏற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *