Cookery

மிளகு ரசம் செய்முறைகளுடன்…!

By  | 

தேவையாள பொருட்கள் :

புளி : ஒரு பாக்கு அளவு
கறிவேப்பிலை : கொஞ்சம்
சீரகம் : 1/2 டீஸ்பூன்
மிளகு : அரை டீஸ்பூன் தாளிக்க
நெய் : ¼ டீஸ்பூன்
கடுகு : ¼ டீஸ்பூன்
தக்காளி : 3
பூண்டு : 8 பல்
கொத்தமல்லி இலை:  சிறு கைபிடி அளவு

தாளிக்க:

கடுகு : ¼ டீஸ்பூன்
சீரகம் : ¼ டீஸ்பூன்
வெந்தயம் : ¼ டீஸ்பூன்
பெருங்காயம் : சிறிதளவு
நல்லெண்ணெய் : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு

செய்முறை:
புளியை தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் முதலில் மிளகு, சீரகத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டு, கருவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். புளிக் கரைசல், அரைத்த தக்காளி விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை இவை மூன்றையும் ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து வைத்துக் கொள்ளவும.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும். தணலைக் குறைத்த விட்டு அதனோடு அரைத்த மிளகு சீரகக் கலவையை சேர்த்து ½ நிமிடம் வதக்கி பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

கடைசியாக புளி, தக்காளி மற்றும் கொத்தமல்லி இலை கலந்த கலவையை ஊற்றி, உப்பு சேர்க்கவும். தணலைக் கூட்டி வைக்கவும். ரசம் நுரை கூடியதும் பாத்திரத்தில் மூடி விடவும். சுவையான மிளகு ரசம் தயார்.

குறிப்பு: புளியின் அளவு மிகவும் கூடியோ, குறைந்தோ இருந்தால் ரசம் நன்றாக இருக்காது.

இப்பொழுது கடைகளில் ரசப் பொடி கிடைக்கின்றது. மிளகு, சீரகம் மட்டும் அரைக்காமல் அதற்குப் பதில் இந்த ரசப்பொடி 2 ஸ்பூன் சேர்த்துத் தாளிக்க வேறு சுவையுடன் அருமையாக இருக்கும்.

இதே ரசத்தில் புளிப்புச் சுவையை சிறிது அதிகப்படுத்திக் கொண்டு அதோடு வேக வைத்து மசித்த துவரம் பருப்பை ஒரு கைபிடி அளவு சேர்க்க பருப்பு ரசம் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *