General

உங்களை ஒருவர் ரகசியமாக காதலிப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

By  | 

நண்பர்கள் மத்தயில் உங்களை ரகசியமாக ஒருவர் காதலிக்கலாம். இந்த தகவல் வேறு ஒரு நண்பர்கள் மூலமோ அல்லது அவர்களது நடவடிக்கை மூலமோ உங்களுக்கு தெரியவரும். அவ்வாறாக உங்களை ரகசியமாக காதலிக்கும் நபர்களை நீங்கள் எப்படி கண்டுபிடிப்பது என இங்கே காணலாம்.

உடல்மொழி

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரி காதல் என்பது வந்துவிட்டால் அதை வெளிப்படுத்துவது அவர்களது உடல் மொழி தான். ஒருவர் உங்களிடம் பேசும் போது மட்டும் வேறு ஒரு டோனில் பேசவது. உங்களை பார்த்ததும் அவர்களது முகம் மாறுவது. உங்களிடம் அவர்கள் பேச தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் எல்லவாற்றையும் வைத்து சற்று கணிக்கலாம்.

பெண்களின் சிக்னல்

ஒரு ஆணை ஒரு பெண் ரகசியமாக காதலித்தால் அந்த பெண் தான் காதலிப்பதை பல்வேறு விதமாக வெளிப்படுத்துவாள். குறிப்பாக அவர் அந்த ஆணுடன் தனியாக இருக்கும் சமயங்களில் ஸ்லீவ்லெஸ் உடை அணிவது. கவர்ச்சியாக உடை அணிவது. இருவரும் பயன்படுத்தும் பொருட்களை அருகருகே வைப்பது. உதாரணமாக நீங்கள் இருவரும் டின்னர் சென்றால் நீங்கள் தண்ணீர் குடித்த கிளாஸ் அருகே அவர் தண்ணீர் கிளாசை வைப்பது போன்ற செயல்கள். அவ்வப்போது அந்த பெண் ஆணை தொட முயற்சிப்பது உதாரணமாக தன் மொபைல் போனில் உள்ள புகைப்படங்களை காட்டுவது போல நெருக்கமாக இருப்பது போன்ற சிக்னல்களை வெளிப்படுத்துவாள்.

ஆண்களின் சிக்னல்கள்

ஒரு ஆண் ரசிகயமாக ஒரு பெண்ணை காதலித்தால் அவர் அதை உடல் மொழிகளில் வெளிக்காட்டுவது குறைவு தான். சில நேரங்களில் அந்த பெண் முன்பு ஸ்டைலாக நடந்து கொள்ளுதல், சும்மா நிக்கும் போது பாக்கெட்டில் கைவிட்டுக்கொண்டு ஸ்டைலாக நிற்பது போன்ற உடல்மொழிகளில் தெரிந்து கொள்ளலாம்.

கண்ணை பார்த்து பேசுவது

ஒருவர் மீது ரகசியமாக காதல் கொண்ட ஆணோ பெண்ணோ அவர்களின் கண்களை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்ப்பார்கள். அதே நேரத்தில் இருவரும் சிறிது நேரம் நேரடியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் அவர்கள் தன் பார்வையை விலக்கிக்கொள்ள பார்ப்பார்கள்.

பேச்சு மூலம்

ஆணும் பெண்ணும் தான் ரசிகயமாக காதலிப்பவர்களிடம் சில குறிப்பிட்ட விஷயங்களை எல்லாம் பேசுவார். தான் காதலிப்பவருடன் பழகும் மற்ற நண்பர்கள் குறித்து ஜோக் செய்வது, அடிக்கடி வெளியில் அழைத்து செல்வது, உங்களுக்கு பிடித்த நபர் யார் என அடிக்கடி கேட்பது.

இது போன்ற விஷயங்கள் மூலம் உங்களை ரகசியமாக காதலிப்பவர்கள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *