Beauty

தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் எலுமிச்சை சாறு

By  | 

தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண எலுமிச்சை சாறு ஒரு சிறந்த மருந்தாகும். எலுமிச்சை சாற்றினை நேரடியாக தலைக்கு பயன்படுத்தக்கூடாது.

எலுமிச்சையில் அசிட்டிக் பண்புகள்,ஸ்கால்ப்பில் எரிச்சலையும்,அரிப்பையும் உண்டாக்கும். அதனால் எலுமிச்சை சாற்றினை ஷாம்புவுடன் சேர்த்து பயன்படுத்தலாம். 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஷாம்புவுடன் கலந்து தலையில் தேய்த்து குளிர்ந்த நீரில் கழுவினால் தலைமுடி நன்கு பொலிவோடு இருக்கும்.

தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு

தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, ஸ்கால்ப் ஊட்டம் பெறும். எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள்,பொடுகையும், தேங்காய் எண்ணெய் ஸ்கால்பிற்கு ஊட்டம் அளிக்கும்.

தயிருடன் எலுமிச்சை சாறு

ஒரு பெளலில் சிறிது தயிரை எடுத்து அத்துடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து ஷாம்பு கொண்டு அலசினால் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, தலைமுடி நன்கு வளர்ச்சி பெறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *