Cinema

ஒரே சமயத்தில் இரு பியானோக்களை வாசித்த சிறுவன்: ஏ.ஆர். ரகுமான் பாராட்டு!

By  | 

பியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து உலக அரங்கையே அதிர வைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரத்தை நேரில் சந்தித்து ஏஆர் ரகுமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்க நாட்டில் ‘தி வேர்ல்ட் பெஸ்ட்’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவனும் கலந்து கொண்டார். இவர் 1900ம் ஆண்டு வெளிவந்த பிளைட் ஆப் தி பம்பிள்பி (Flight of the bumblebee) என்ற இசையை பியானோவில் வாசிக்கத் தொடங்கினார்.

முதலில் சாதாரணமாக வாசித்த சிறுவன் லிடியன், பின்னர் வேகமெடுத்து சடசடவென வாசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அனைவரும் எழுந்து நின்று பாராட்ட, இதை விட தன்னால் பல மடங்கு வேகத்தில் வாசிக்க முடியும் என்று மீண்டும் வாசிக்கத் தொடங்கினார். முதலில் சாதாரணமாக வாசித்த சிறுவன், தொடர்ந்து நிமிடத்துக்கு 208 பீட்ஸ், அடுத்ததாக 325 பீட்ஸ் என்று வேகத்தின் உச்சிக்கு சென்று அசத்தினார்.

இறுதி போட்டியில் இரண்டு பியானோக்களை வாசித்து ‘உலகில் சிறந்தவர்’ என்ற பட்டத்துடன் ஏழு கோடி ரூபாய் பரிசு தொகையையும் வென்றார்.

லிடியன் ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியில் பயின்றவர். சமீபத்தில் லிடியனை அழைத்து பாராட்டிய ஏ.ஆர்.ரகுமான் ‘லிடியனின் வெற்றி இந்தியாவின் வெற்றி’ என புகழ்ந்தார். லிடியனை தன் இசைப்பள்ளியின் துாதராகவும் ஏ.ஆர்.ரகுமான் நியமித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *